இலங்கையின் ஒவ்வொரு நிருவாக
மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளை பிரதிபலிக்கும் வகையில்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 25 பத்து ரூபாய் நாணயக் குற்றிகள்
தொடர்பில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.
யாழ். மாவட்டத்திற்கு நல்லூர் கோயிலும்
மன்னாருக்கு மடு தேவாலயமும் அநுராதபுரத்திற்கு ருவன்வெலிசாயவும்
மொனராகலைக்கு கதிர்காம விகாரையும் தனித்துவ அடையாளப்படுத்தும் வகையில் மத
ஆலயங்களை நிர்வாக மட்டத்தின் தனித்துவமான சின்னமாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில்
பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கின்ற அவர்களை அடையாளப்படுத்தும் வகையில்
ஒரு சின்னத்தை தனித்துவப்படுத்த முடியாதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை முஸ்லிம்கள் 1,500 வருட வரலாற்றை
கொண்டுள்ளனர். அத்தோடு ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், பிரித்தானியர் போன்ற
அந்நிய சக்திகள் இலங்கையை ஆக்கிரமித்தபோது அவர்களுக்கு எதிராக இலங்கை
மன்னர்களோடு இணைந்து முஸ்லிம்கள் தேசத்துக்காக போராடியுள்ளனர்.
நாணயக் குற்றியில் முஸ்லிம்களை
அடையாளப்படுத்த விரும்பாத இந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வை
பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.நிதி அமைச்சின் ஊடாகவே இந்த
நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டது. நாட்டின் நிதி அமைச்சராக ஜனாதிபதியே
இருக்கின்றார்.
இவரே சகல விடயத்தையும் இன ரீதியில்
பாகுபடுத்தி பார்க்கிறார். நாணயக் குற்றியில் முஸ்லிம்களின் அடையாள
சின்னமொன்றையாவது பதிவு செய்வதற்கு அவர் விரும்புவதாக இல்லை என்றும்
தெரிவித்தார்.

0 comments:
Post a Comment