அஸ்ரப் ஏ. சமத்: காணி
அபிவிருத்தி அமைச்சர் ஜாணக்க பண்டார தெனனக்கோன் இன்று பி.பகல்
நாரேஹேன்பிட்டியில் உள்ள அரச தகவல் திணைக்களத்தின் தமது காணி அமைச்சின்
அபிவிருத்திகள் பற்றி (17 திகதி)
ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்தினார்.
இதன்போது அமைச்சரே நீங்கள் தம்புள்ளையை
பிரதிநிதித்துவப் படுத்துகின்றீர்கள் என்ற வகையில் தற்போது தம்புள்ளைப்
பள்ளிவாசலின் நிலைமை என்ன? என நான் வினவிய போது அமைச்சர் இப்படி பதிலலித்தார் ,
அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான்
தம்புல்லையில் உயிருடன் இருக்கும் வரை அந்தப் பள்ளிவாசலை அகற்ற விடமாட்டேன்
என அமைச்சர் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜாணக்க பண்டார தெனனக்கோன்
பதிலளித்தார்.

0 comments:
Post a Comment