எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது
வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட
மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கரு ஜயசூரிய போட்டியிடுவார் என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
கரு ஜயசூரியவுக்கு, மக்கள் விடுதலை முன்னணியும் தனது ஆதரவை வழங்க
உள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிட மாட்டார்கள் என்றும்
அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கரு
ஜயசூரியவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
மாதுலுவாவே சோபித்த தேரருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே இந்த
தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 10ஆம் திகதியன்று ஜனாதிபதித்
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்
குறித்து அறிவிக்கப்படும் என்றும் மேற்படி தகவல்கள் மேலும் கூறுகின்றன

0 comments:
Post a Comment