உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கும் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சிக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.ஏ.எம். அதாவுல்லா இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சம்பளம் 5000 ரூபாவில் இருந்து 15 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
பிரதேச சபையின் உப தலைவரின் சம்பளம் 6500 ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் 10 ஆயிரம் ரூபாவாக இருக்கும் பிரதேச சபையின் தலைவரின் சம்பளம் 25 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அதேவேளை நகர சபை உறுப்பினர் ஒருவர் சம்பளம் 7000 ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.
நகர சபை பிரதித் தலைவரின் சம்பளம் 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாவாகவும் நகர சபையின் தலைவரின் ஊதியம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 30 ஆயிரம் ரூபாவாகவும் உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் அதாவுல்லா மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment