• Latest News

    November 17, 2014

    தலைவரின் உத்தரவை மீறி அலறி மாளிக்கை சென்ற மு.காவினர்

    முஸ்லிம் காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர், அந்தக் கட்சித் தலைவரின் உத்தரவினையும் மீறி, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அலறி மாளிகைக்குச் சென்று வந்துள்ளதாக தெரியவருகிறது.

    நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எம்.எம். அன்சார் மற்றும் அந்த சபையின் உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி ஆகியோரே - இவ்வாறு அலறி மாளிகைக்கு சென்று வந்துள்ளனர்.

    நாட்டிலுள்ள ஆளுந்தரப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை, அலறி மாளிகை வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆளும் தரப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்களில், மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கான வதிவிட செயலமர்வொன்று மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடைபெற்ற செயலமர்வில் மு.காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயலமர்வில் மு.காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மேற்படி செயலமர்வின் முதல் நாளன்றுளூ 'மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் அலறி மாளிகைக்குச் செல்ல வேண்டாமெனவும், அலறி மாளிகைக்கு மு.கா. உறுப்பினர்கள் செல்வதா இல்லையா என்பது தொடர்பில், தாம் பின்னர் அறிவிக்கவுள்ளதாகவும்' மு.காங்கிரசின் தலைவர் தெரிவித்திருந்தார்.

    ஆயினும், நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எம்.எம். அன்சார் மற்றும் அந்த சபையின் உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி ஆகிய இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அலறி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வுக்குச்  சென்றிருந்தனர். மு.காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான செயலமர்வில் கலந்து கொள்ளாத நிலையிலேயே இவர்கள் அலறி மாளிகை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    மு.காங்கிரஸ் தலைவரின் உத்தரவினையும் மீறி, அலறி மாளிகைக்குச் சென்ற நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி என்பவர், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசனலியின் சகோதரர் ஆவார். உப தவிசாளர் எம்.எம்.எம். அன்சார் என்பவர், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிமுடைய பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

    இதேவேளை, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கிணங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை – மு.காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் அலறி மாளிகை சென்றிருந்தனர். ஆயினும் - மு.காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவில்லை. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவே மு.கா.வின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை அலறி மாளிகையில் வைத்துச் சந்தித்திருந்தார்.

    அலறி மாளிகை சென்ற உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டதோடு, ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிரதேச அபிவிருத்திக்கென 20 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் தெரியவருகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைவரின் உத்தரவை மீறி அலறி மாளிக்கை சென்ற மு.காவினர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top