ஒலுவில் பிரதேசத்தில் 'நெல்சிப்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீதி நிர்மாணத்தின்போது பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஐ.ம.சு.முன்னணி சார்பான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி. றியாஸ் குற்றம் சாட்டினார்.
குறித்த வீதியானது பூரணமாக செய்து முடிக்கப்படாத நிலையில், அதற்கான கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வீதி நிர்மாணம் தொடர்பில், கொந்தராத்துக்காரர்களால், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட சிலருக்கு 25 லட்சம் ரூபா வரையில் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை, பிரதேச சபை காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் மேற்கண்ட விடயங்களைத் தெரித்தார்.
இது தொடர்பில் உறுப்பினர் றியாஸ் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்ளூ
'நெல்சிப் திட்டத்தின் கீழ் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள வீதி நிர்மாணத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீதி நிர்மாணம் தொடர்பில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து, பல தடவை இந்த சபையில் பேசியிருக்கின்றேன். மேற்படி வீதிக்கு இன்னும் கிறவல் போடப்படவில்லை. ஆனால், அதற்குரிய பணம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீதியானது சரியான முறையில் செப்பனிடப்படவுமில்லை.
இந்த வீதி நிர்மாணத்தின் போது, அட்டாளைச்சேனை பிரதேச சபையைச் சேர்ந்த பலருக்கு 25 லட்சம் ரூபாய் பணத்தை, தாம் லஞ்சமாக வழங்கியதாக, அந்த வீதியை நிர்மாணித்த கொந்தராத்துக்காரர்களே கூறுகின்றனர்.
குறித்த 25 லட்சம் ரூபாய் பணத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளருக்கு 07 லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் எனக்கும் தெரியும். கொந்தராத்துக்காரர்களிடம் உப தவிசாளர் இன்னும் 03 லட்சம் ரூபாய் கேட்டுக் கொண்டிருக்கின்றார். மிகுதிப் பணம் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பதை தவிசாளர் விளங்கிக் கொள்வார்' என்றார்.
மேற்படி குற்றச்சாட்டுக்களை பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் முன்வைத்துக் கொண்டிருந்த போது, சபையில் அமர்திருந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எல். அமானுல்லா குறுக்கிட்டுளூ 'இவ்வாறு லஞ்சம் வழங்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா' எனக் கேட்டார். அதற்கு பிரதேச சபை உறுப்பினர் றியாஸ்ளூ 'ஆம், எனக்குத் தெரியும்' என்று பதிலளித்தார்.
சர்ச்சைக்குரிய வீதி நிர்மாணத்துக்காக, நெல்சிப் திட்டத்தின் கீழ், 01 கோடி 45 லட்சத்து 22 ஆயிரத்து 375 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment