இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஊடகவியலாளர் சந்திப்பு மாலை வரை பிற்போடப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று மதியம் கொழும்பு நகர மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால கலந்து கொள்ளும் முக்கிய ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெறவிருந்தது.
இதற்காக வேறு நபரின் பெயரில் நகர மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் தற்போது கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் ஏராளமாகத் திரண்டுள்ளனர்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment