- சொத்துக்களை குவிப்பதற்காக மக்கள் எமது கைகளில் அதிகாரத்தை வழங்கவில்லை. ஊழல், மோசடிகளைச் செய்வதற்காகவும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
தாம் பொதுவேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் காலத்துக்கு இடம்தரப் போவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், தாம் இன்னும் அரசாங்கத்தில் இருந்து விலகும் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் நாளை என்பதே அதற்கு பதில் சொல்லும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, சொத்துக்களை குவிப்பதற்காக மக்கள் எமது கைகளில் அதிகாரத்தை வழங்கவில்லை. ஊழல், மோசடிகளைச் செய்வதற்காகவும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
அதிகாரம் கிடைத்துவிட்டது என்ற மமதையில் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த அதிகாரத்தில், மக்களை அடிபணியச் செய்யவும் கூடாது என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், அதிகாரத்தின் போதையில் நாம் சிக்குண்டிருக்கவும் கூடாது என்று தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, பொதுமக்களின் பொறுப்பாளன், ஒருபோதும் அந்த மக்களை அடிமைகளாக்கி நசுக்கக் கூடாது என்றும் கூறினார்.
தாம் சுகாதார அமைச்சராக சிறந்த சேவையை ஆற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர் எதிர்காலத்திலும் மக்கள் சேவையை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

0 comments:
Post a Comment