• Latest News

    November 10, 2014

    அனுஷ்காவிற்கு முத்தத்தை காற்றில் பறக்க விட்ட கோஹ்லி

    இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அரைச்சதம் அடித்த கோஹ்லி, பறக்கும் முத்தத்தை காதலி அனுஷ்காவிற்கு அனுப்பி வைத்தார்.

    ஐதராபாத்தில் இலங்கை- இந்தியா அணிகள் நேற்று 3வது ஒருநாள் போட்டியில் மோதின. 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது.

    இலங்கை அணியில் டில்ஷான் அரைசதமும், ஜெயவர்த்தனே சதமும் விளாச அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்கள் குவித்தது.

    இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் தவானுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர் 91 ஓட்டங்களில் வெளியேறி சதத்தை தவறவிட்டார். இருப்பினும் இவர் 2 ஆயிரம் ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார்.

    மேலும் இந்த போட்டியில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி 53 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 6 ஆயிரம் ஓட்டங்கள் கடந்த வீரர் உலக சாதனையை படைத்தார்.

    இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தொடரையும் கைப்பற்றியது.

    முன்னதாக அரைச்சதம் போட்டவுடன் ஹெல்மட்டைக் கழற்றிய கோஹ்லி, தனது மட்டையை முத்தமிட்டார். அத்தோடு நில்லாமல் அந்த மட்டை மூலமாக ஒரு பறக்கும் முத்தத்தையும் கேலரி நோக்கி திருப்பி விட்டார்.

    வேகமாக அந்த முத்தம் அங்கே உற்சாகத்துடன் கோஹ்லியை ஊக்குவித்து போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய காதலி அனுஷ்கா சர்மாவை நோக்கிச் சென்றது.

    வெட்கம் முகத்தில் மலர, கண்களில் சின்னதாக கண்ணீர் மல்க, சந்தோஷத்துடன் எழுந்து நின்று கைதட்டி அதனை ஏற்றுக் கொண்டார் அனுஷ்கா.

    இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்றிருந்த போது விராட் கோஹ்லி சரியாகவே ஆடவில்லை. அனுஷ்காவும் அப்போது கோஹ்லியுடன் தங்கியிருந்தார்.

    இதனால் அவரால்தான் கவனம் திசை திரும்பி கோஹ்லி சரியாக ஆடவில்லை என்ற அவப் பெயர் அனுஷ்காவிற்கு கிடைத்தது.

    அந்த அவப் பெயரை தற்போதைய இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் துடைத்து விட்டார் கோஹ்லி.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனுஷ்காவிற்கு முத்தத்தை காற்றில் பறக்க விட்ட கோஹ்லி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top