• Latest News

    November 10, 2014

    நாங்கள் பதவிகளுக்கு ஒரு நாளும் சோரம் போக மாட்டோம்: பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்

     சஹாப்தீன்: தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இல்லையாயின் இனவாதிகள் இரு சமூகங்களையும் நசுக்கி அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வார்கள். எமது எதிர்கால சமூகம் நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமாக இருந்தால், நாம் மொழி ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும்.

    இவ்வாறு, நிந்தவூர் கலநல சேவைகள் மத்திய நிலையத்தில் விவசாயிகளுக்கு விதை நெல்லும், வரட்சி நஸ்டஈட்டுக்கான படிவங்களும் வழங்கிய வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.

    கமநல அபிவிருத்தி உத்தியோஸ்ர் ஐ.எல்.ஏ.ஹாரித் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
    சிறுபான்மையிலும், சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களை இரு பெரும்பான்மையினரும் அடக்கி ஆளுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருவதனை நாங்கள் மிகவும் தெளிவாகப் பார்க்கின்றோம். இன்று எமது கட்சி கோரியுள்ள கரையோர மாவட்டத்தை சிங்கள் இனவாதிகள் மட்டுமன்றி தமிழர்கள் உள்ள சிலரும் இனவாதம் பேசி எதிர்க்கின்றார்கள். ஆனால், எங்களின் இக்கோரிக்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரளித்துக் கொண்டிருக்கின்றது.

    இதே வேளை, ஒரு சில தமிழ் பிரதேச சபைகள் கரையோர மாவட்டத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. கரையோர மாவட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி, தமிழர்களுக்கு நன்மையானதாகும். ஆனால், சில தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபங்களுக்காக பொதுபல சேன போன்ற இனவாத அமைப்புக்களுடன் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    காரைதிவு சந்தியில் உள்ள முஸ்லிம்களுக்குரிய காணியில் எதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நாங்கள் பேசிய போது, அதனை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்கள். ஆனால், அதற்கு காரைதீவு பிரதேச சபையினர் தடையாக இருக்கின்றார்கள்.
    இவ்வாறு, தமிழர்களில் ஒரு குழுவினர் செயற்படுவது தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை குழைக்கும் செயலாகும். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றது.

    இன்று இனவாத இயக்கங்கள் எங்களை நசுக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். நாங்கள் மூடிக் கொண்டிருக்கவில்லை. அவர்களை நடவடிக்கைகளை அரசாங்கத்தில் உள்ள கட்சி என்ற வகையில் கட்டுப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இன்று முஸ்லிம் காங்கரஸை அழிப்பதற்கு சிலர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் அரசாங்கத்துடன் இணைய இருப்பதாகவும், பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது திட்டமிட்ட சதியாகவும். முஸ்லிம் காங்கிரஸிற்குள் பிரிவை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். அமைச்சர் பதவிக்கு என்றால் நான் எப்போதோ கட்சி மாறியிருப்பேன். நான் என்றும் முஸ்லிம் காங்கிரஸுடன் இருப்பேன்.

    இனவாத நடவடிக்கைகளில் இருந்து சமூகத்தையும், கட்சியையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எமது கட்சி சமூகத்திற்கு முன்னுரிமை கொடுத்தே முடிவுகளை எடுக்கும். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இன்றைக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் தருவதற்கு அமைச்சர் பசில்ராஜபக்ஷ தலைவரிடம் கேட்டார். ஆனால், தலைவர், எங்களுக்குரிய காலம் 2015 ஏப்ரலில் உள்ளது. அப்போது பெயரைத் தருகின்றோம் என்று சொல்லிவிட்டார். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை முன் கூட்டியே எங்களுக்கு தந்துவிட்டு, எதிர்வரும் தேர்தலில் சிக்க வைப்பதற்கு அவர் திட்டமிட்டார். ஆகவே நாங்கள் பதவிகளுக்கு ஒரு நாளும் சோரம் போக மாட்டோம்.

    நிந்தவூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லுகின்ற பாதைகள் ஒடுங்கிக் காணப்படுகின்றன. செங்கப்படை கண்டத்திற்குரிய பாதை 20அடியாக இருந்தது. இப்போது 12அடிதான் உள்ளது. இவ்வாறு பல பாதைகள் ஒடுக்கப்பட்டுள்ளது. இப்பாதைகளை விவசாயிகள்தான் பாதுகாக்க வேண்டும். சிலர் பாதைகளை அமைப்பதற்கு தடையாக இருக்கின்றார்கள். பாதைகள் அமைக்கப்படும் போது காணிகளுக்கு பெறுமதி அதிகரிப்பதோடு, விவசாயம் செய்வதும் இலகுவாக்கப்படுகின்றது. வேளாண்மை அறுவடை செய்வதற்கு முன்னர் மனித உழைப்பை பாவித்தோம். இன்று இயந்திரங்களின் மூலமாக அறுவடை செய்கின்றோம். ஆகவே, இத்தகைய இயந்திரங்கள் செல்வதற்கு பாதைகள் அவசியமாகும்.

    நாம் விவசாயச் செய்கைளின் போது அதிகளவு கிருமிநாசினிகளை பயன்படுத்துகிறோம். இதனை தவிர்க்க வேண்டும். உணவு நச்சுத்தன்மையாக இருக்கின்றது. இந்த உணவுகளை நாங்கள் உண்ணுகின்றோம். இதனால், கிட்னி பாதிக்கப்படுகின்றது. கென்ஸர் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன. ஆதலால், கிருமிநாசினிகளின் பாவனையைக் குறைத்து, இயற்கை முறைகளை கூடுதலாக பாவித்து விவசாயம் செய்ய முயற்சிகளை எடுக்க வேண்டும். வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்தி எங்களுக்கு தேவையான பயிர்களை நச்சுத் தன்மையில்லாத வகையில் செய்கை பண்ண வேண்டும் என்றார்.

    இவ்வைபத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாங்கள் பதவிகளுக்கு ஒரு நாளும் சோரம் போக மாட்டோம்: பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top