• Latest News

    November 08, 2014

    ஹுசைனின் அறிக்கை வருந்தத்தக்க விடயமாகும்: இலங்கை

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயித் ராத் அல் ஹுசைனின் அறிக்கை வருந்தத்தக்க விடயமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.

    ஆந்த அறிக்கை தொடர்பில் ரவிநாத ஆரியசிங்ஹ, ஹுசைனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,.

    ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எல்லை மீறிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இது வருந்தத்தக்க விடயமாகும். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட, இறையாண்மையுள்ள நாட்டின் மீது அவர் எல்லைமீறிய வாரத்தைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது அவர் அவதூறு ஏற்படுத்தியுள்ளதோடு, இழிவும் படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை, இலங்கை அரசு தொடர்ந்து தொடர முயன்று வருகின்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடியவையாகும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல்-ஹுசைன், வெள்ளிக்கிழமை விடுத்திருந்த அறிக்கையில்,

    இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
    இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுக்கின்றது.

    இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும்.
    இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரியபோதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும்.

    இந்த ஐ.நாவின் புலன் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது மற்றும் மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகள், ஐ.நா சாசனத்தை நிலைநிறுத்த விளையும் ஐ.நாவின் உறுப்பு நாடு என்ற வகையில் ஏற்க முடியாத ஒன்றாகும்.

    இலங்கையின் இறுதிப் போரில் இருதரப்பினரும் சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறியதாக பரந்துபட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், இலங்கை அங்கு ஒரு சுயாதீனமான புலன் விசாரணை நடைபெறுவதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்றது.

    இலங்கையின் சிவில் சமூக அமைப்புக்களும், மனித உரிமைக் காவலர்களும், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், ஏனைய வகையிலான மிரட்டல்களையும் எதிர்கொள்வதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார். '' அங்கு உருவாக்கப்பட்டுள்ள பயத்தினாலான சுவரானது, ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மக்கள் சாட்சியமளிப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தடுக்கிறது.

    இந்த விசாரணை நேர்த்தியற்றது என்றும், பாரபட்சமானது என்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐ.நா ஆணையர் தவறு என்று கூறி நிராகரித்துள்ளார்.

    ஆகவே இந்த விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தம்முடன் ஒத்துழைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹுசைனின் அறிக்கை வருந்தத்தக்க விடயமாகும்: இலங்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top