• Latest News

    November 06, 2014

    கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தூரமாக்கப்பட்டுள்ளேன் : கல்முனை மாநகர சபை முஸ்லிPம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர்

    பி.எம்.எம்.ஏ.காதர்; மக்கள் நலன் சார்ந்த விடயங்களை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர் பிரதிநிதிகளிடம் மிகவும் காட்டமாகக் கூறிவருவதால் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து நான் தூரமாக்கப் பட்டுள்ளேன் எனத்தெரிவித்து கல்முனை மாநகர சபை முஸ்லிPம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,  கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் பதவி மருதமுனை மக்களுக்கு உரித்தானது அது சட்டத்திற்கும் நியாயத்திற்கும் உட்படுத்தப்பட்டு வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால்
    மருதமுனை மக்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்ற எனக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் அது நடக்கவில்லை.

    மிக நீண்டகாலமாக கட்சியின் பலதரப்பட்ட போராட்டங்களில் நான் என்னை ஈடுபடுத்தியிருக்கின்றேன் அதற்காக பல தடவைகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றேன் ஆனால் இந்தக் கட்சியை 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று இந்த நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியலில் ஈடுபட முடியாமல் செயற்பட்டவர்கள் இன்று மாகாண அரசியலில் அமைச்சர் அந்தஸ்;திலும் கட்சியில் இரண்டாம் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.

    இதே போன்று கடந்த காலத்தில் புனித நோன்பின் போது இப்தார் நிகழ்வை செய்ய விடாமல் காடைத்தனம் புரிந்தவரகள் இன்று மாகாண அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் இதுதான் இன்றைய ஜனநாயகமும் நீதியுமாகும்.

    மேலும் கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது கல்முனைப் பிரதேசத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சாய்ந்தமருதுக்கு  ஒரு வேட்பாளரையும், அதே அளவு வாக்காளர்களைக் கொண்ட கல்முனைக் குடிக்கு ஒரு வேட்பாளரையும் நிறுத்திவிட்டு குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மருதமுனைக்கு என்னையும் இன்னுமொருவரையும் வேட்;பாளர்களாக நிறுத்தி மருதமுனைக்கான  மாகாண சபை யின் அரசியல் அந்தஸ்த்தை இல்லாமல் செய்யப்பட்டது. 

    இது மருதமுனைக்குச் செய்யப்பட்ட அநீதியாயமாகும். இதே போன்று இன்னும் பல விடயங்களும், உண்மைகளும்; மறைக்கப் பட்டுக்கிடக்கின்றன.

    இது மாத்திரமன்றி சாய்ந்தமருதுக்கு பாராளுமன்ற உறுப்பினர்,மாகாணசபை உறுப்பினர், மாநகர பிரதி முதல்வர், கல்முனைக்குடிக்கு  பாராளுமன்ற உறுப்பினர், மாநகர முதல்வர் இருக்க முடியுமாக இருந்தால் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட மருதமுனைக்கு எந்த அரசியல் அதிகாரங்கயும் இல்லாமல் செய்யப்படுவது ஏன் ?

    இந்த நிலையில் இந்த நாட்டின் தேசிய அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கு முடியுமென்றால்  கல்முனை பிரதேச அரசியலை  ஏன் மருதமுனை தீர்மானிக்க முடியாது? எனது நியாயமான கருத்துக்களை தயவுசெய்து யாரும் பிரதேச வாதமாகப் பார்க்க வேண்டாம்.    

    இந்தக் கருத்துக்கள் மருதமுனை மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பும,;தர்மம் என்கின்ற உண்மையான உணர்வு என்ற ரீதியிலேயே பார்க்கப்பட வேண்டுமென்பதே
    எனது பணிவான வேண்டுகோளாகும்;.

    இதே போன்று  இன்னும் ஒரு விடயம் இருக்கின்றது. அதாவது, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதமுனை மேட்டு வட்டையில் அரசாங்கத்தால் நிர்மானிக்கப்பட்ட 65மீட்டர் வீட்டுத்திட்டத்தில் 186 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்த நிலையில் 101 வீடுகள் மாத்திரமே இது வரை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய 85 வீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

    இந்த வீட்டுத்திட்டத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் பற்றி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடமும், கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடமும் பல முறை எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஞ்சிய வீடுகளை வழங்கவும் இல்லை வழங்கிய வீடுகளுக்கான அடிப்படைவசதிகளை செய்து கொடுக்கவுமில்லை. பாதிக்கப்பட்ட மக்களே தங்களது சொந்தப் பணத்திலேயே மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளீட்ட விடயங்களைப் பூர்த்தி செய்துள்ளனர்.

    புறக்கணிப்புக்களுக்கு என்றோ ஒரு நாள் காலம் பதில் சொல்லும்  என்ற நம்பிக்கையில் மருதமுனை மக்கள் காத்தருக்கின்றார்கள்.  

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தூரமாக்கப்பட்டுள்ளேன் : கல்முனை மாநகர சபை முஸ்லிPம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top