சத்ரியன்-
வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த அரசாங்கத்துக்கு, எதிர்பார்க்கப்பட்டது போலவே, உயர்நீதிமன்றத்தின் கருத்து சாதகமாக அமைந்திருக்கிறது.
அரசியலமைப்பின் 18வது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு எந்தத் தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
அதுபோலவே, 18வது திருத்தச்சட்டத்துக்கு அமைய, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும் தடையில்லை என்றும் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.
இது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்ல, கருத்தேயாகும்.
ஆனால், இந்தக் கருத்து, மூன்றாவது தடவை போட்டியிட முனையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எவரேனும் வழக்குத் தொடுக்க முடியாத வகையிலான ஒரு தீர்ப்புப் போலவும் அமைந்திருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் கருத்து வேறு விதமாக அமைந்திருந்தால் மாத்திரமே, இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
நாட்டின் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து விட்டதாக பொதுவான குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர்களே இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்துக்கு சார்பான இந்தக் கருத்து ஆச்சரியம் தரும் ஒரு விடயமல்ல.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாதகமான முறையில், உயர்நீதிமன்றத்தின் கருத்து வரப்போவதில்லை என்பதை, சாதாரண மக்கள் கூட முன்னரே அறிந்திருந்தனர்.
எனினும், நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கேட்கத் தூண்டியவராவார்.
மூன்றாவது தடவையும், மஹிந்த ராஜபக்ச போட்டியிட முனைந்தால், அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று அவர் பல மாதங்களுக்கு முன்னரே எச்சரித்திருந்தார். அவர் எதற்காக எச்சரித்தார் என்பது மர்மமாகவே உள்ளது.
நீதித்துறை சுதந்திரம் பற்றிக் கேள்வி எழுப்பிய அவருக்கு, எந்த நம்பிக்கையில் அத்தகையதொரு வழக்கைத் தொடுக்கும் துணிவு வந்திருக்க முடியுமென்று தெரியவில்லை.
அவ்வாறாயின், இரண்டு காரணங்கள் மாத்திரமே அவருக்கு அத்தகைய தைரியத்தைக் கொடுத்திருக்க முடியும்.
முதலாவது, அவர் கூறியது போன்றல்லாமல், நீதித்துறை முற்றிலும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும்.
இரண்டாவது, அவர் மஹிந்த ராஜபக்சவைப் பாதுகாக்க முனைபவராக இருக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும், மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் மேடையேறியவர்தான் சரத் என் சில்வா.

பின்னர் ஒரு கட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சரத் என். சில்வாவின் தோள் மீது கைபோட்டபடி பேசுகின்ற படங்கள் ஊடகங்களில் வெளியாகின.
அண்மையில் அவர்தான் மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடும் உரிமை இல்லை என்று சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
17வது திருத்தத்துக்கமைய, சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால், 18வது திருத்தச்சட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ள சலுகையை அனுபவிக்க முடியாது என்று அவர் வாதம் செய்தார்.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 18வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரே, இரண்டாவது தடவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.
அதுவே இந்த விவகாரத்தில் ஒரு பலவீனமான விடயம்.
ஆனால், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில், இரண்டாவது முறை பதவியில் இருக்கும் ஜனாதிபதி, தனது பதவிக்காலத்தின் நான்காண்டுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா? என்பது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இதற்கு உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியிருக்க வேண்டியது அவசியமே.
எவ்வாறாயினும், சரத் என். சில்வா வழக்குத் தொடுப்பேன் என்று மிரட்டியதால் தான், உயர்நீதிமன்றத்திடம் இருந்து தெளிவான ஆலோசனை ஒன்றைப் பெற்றுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
இதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சரத் என். சில்வா உதவி அளித்துள்ளாரே தவிர, எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெறாமல், ஒருவேளை அவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தால், சில வேளைகளில் ஏதேனும் காரணத்தைக் காட்டி மஹிந்த ராஜபக்சவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கலாம்.
அல்லது உயர்நீதிமன்றத்திடம் தடை கோரி எவராலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம்.
அவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டால், ஜனாதிபதி தேர்தலை பின்தள்ளிப் போடும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும்.
இப்போது, உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிந்து கொண்டு, தேர்தல் நகர்வுகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதால், இனி ஜே.வி.பி.யோ, சரத் என் சில்வாவோ நீதிமன்றத்தைக் காட்டி மிரட்ட முடியாது.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அடுத்த பதவிக்காலத்துக்கான போட்டி குறித்து சர்ச்சையைக் கிளப்பியவர்கள் அவருக்குச் சாதகமான விளைவையே பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இது தற்செயலானதா-? திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? என்று தெரியவில்லை.
சரத் என். சில்வா பிரதம நீதியரசராக இருந்த காலகட்டத்தில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில் சிக்கியிருந்தார்.
அந்த வழக்கில் மஹிந்த ராஜபக்சவுக்கு சார்பாக தீர்ப்பளித்திருந்தவர் சரத் என் சில்வா.
அந்த தீர்ப்பை, தான் மாற்றி எழுதியிருந்தால் மஹிந்த ராஜபக்சவின் தலைவிதியே மாறியிருக்கும் என்று அண்மையிலும் கூட சரத் என். சில்வா கூறியிருந்தார்.
அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் தான், ஜனாதிபதி தேர்தலில் அவரால் 2005ம் ஆண்டு போட்டியிட முடிந்தது.
அப்போது அவர் இன்னொரு விடயத்தையும் கூறியிருந்தார்.
ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில், நிதி முறைகேடு இடம்பெற்றிருந்தது உண்மை. ஆனால், அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட முறைதான் தவறானது.
அதனால் தான் அவர் தப்பினார். அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நேரம் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நேரம் தவறானது என்று கூறிய சரத் என். சில்வா, இம்முறை மூன்றாவது பதவிக்காலத்துக்கு மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டால், வழக்குத் தொடுப்பேன் என்று முந்திக் கொண்டது சரியான தருணமா? என்ற கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உரிமையில்லை என்று வேறு எவரேனும், வழக்குத் தொடுத்து விடக் கூடாது என்ற கரிசனையில் தான் சரத் என். சில்வா முற்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.
நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராகவும், மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், சரத் என்.சில்வா மீண்டும் மேடையேறத் தொடங்கியிருந்தாலும், அவர் கிளப்பிய சர்ச்சைதான் பல தடைகளில் இருந்து ஜனாதிபதி மஹிந்தவைக் காப்பாற்றியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், சரத் என்.சில்வாவின் புண்ணியத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
இனி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பிரசாரங்களைத் தொடங்க வேண்டியதுதான் மிச்சம்.
நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பது போல, சரத் என் சில்வாவின் கலகம், மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
இருந்தாலும், இது அவருக்கு மூன்றாவது முறையும் வெற்றியைப் பெற்றுத் தருமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
(வீரகேசரி )

0 comments:
Post a Comment