• Latest News

    November 06, 2014

    மார்பகங்களை சிறிதாக்க சத்திரசிகிச்சை பெற்ற பெண் ஆபத்தான நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

    தனது மார்பகங்களை சிறிதாக்கிக் கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்ட பெண்ணொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக வைத்தியரொருவர் 2 இலட்சம் ரூபாய் கேட்டதாகவும் அவரின் அவ்வளவு பணம் இல்லாமையினால் 50 ஆயிரம் ரூபாவுக்கு, குறித்த வைத்தியரின் களனியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அப்பெண் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியரின் வீட்டில், சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரிய மார்பகங்களை சிறிதாக்குவதாக வெளியான விளம்பரமொன்றைப் பார்த்தே, கு41 வயதான மேற்படி பெண், கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி அவ்வைத்தியரை நாடி இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மார்பகங்களை சிறிதாக்க சத்திரசிகிச்சை பெற்ற பெண் ஆபத்தான நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top