• Latest News

    November 17, 2014

    கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக்குமாறு பிக்குகள் முன்னணி ரணிலுக்கு கடிதம்

    எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் இந்த பிக்கு முன்னணியின்

    தலைவர் கிரம்பே ஆனந்த தேரர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

    மேலும் கரு ஜயசூரிய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படாத பட்சத்தில் தாம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி ஆகியவற்றை விட்டும் விலகப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் கிராம்பே ஆனந்த தேரர் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக்குமாறு பிக்குகள் முன்னணி ரணிலுக்கு கடிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top