• Latest News

    November 06, 2014

    கிண்ணியா நகர முன்னாள் பிதாவு முஜீப் ஐக்கிய முஸ்லிம் கட்சியில் இணைகிறார்

    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்: கிழக்கு மாகாணத்தை மையப் படுத்தி பொறியியலாளரும்,பிரபல தொழிலதிபரும்,சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் தலைமையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய முஸ்லிம் கட்சியானது எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எழப் போகும் சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுக்கும் நோக்குடன் பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள்,புத்தி ஜீவிகளை தங்களோடு இணைக்கும் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.அந்த வகையில் பிரபல சட்டத்தரணியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும்,முன்னாள் கிண்ணியா நகர பிதாவுமான ஏ.எம் முஜீப் அவர்களை ஐக்கிய முஸ்லிம் கட்சி இல் இணைத்துக் கொள்வதற்கு நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டை எட்டியதைத் தொடர்ந்து ஏ.எம் முஜீப் அவர்கள் ஐக்கிய முஸ்லிம் கட்சி இல் இணைந்துள்ளதாக அக் கட்சியின் ஊடக இணைப்பாளர் உத்தியோக பூர்வமாக எம்மிடம் தெரிவித்தார்.

    மேலும்,அக் கட்சியின் ஊடக இணைப்பாளர் எம்மிடம் கருத்துத் தெரிவிக்கும் போது பல நபர்கள் தங்களோடு இணைய உறுதிமொழி அளித்துள்ளதாகவும் தக்க தருணத்தில் அவர்கள்  தங்களோடு இணைய உள்ளதாகவும்,பலரை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் தங்கள் கட்சி அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிண்ணியா நகர முன்னாள் பிதாவு முஜீப் ஐக்கிய முஸ்லிம் கட்சியில் இணைகிறார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top