• Latest News

    November 17, 2014

    பேருவளையில் சிறு சிக்கல்: முழு இலங்கையும் எரிவதாக ற்குக் காட்ட முற்பட்டனர் என்கிறார் மஹிந்த

    நாட்டில் இன, மத, பேதத்தை தூண்டி விடுகின்றனர். இங்கு ஒரு சிறிய சம்பவம் நடந்தாலும் அதை பூதாகரமாக்கி சர்வதேசத்துக்குக் கொண்டுசென்று நாட்டைக் காட்டிக்கொடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் செயற்படுகின்றனர். 

    பேருவளை மக்களுக்கு சிறு சிக்கல் ஏற்பட்ட போது முழு இலங்கையும் எரிவதாக உலகிற்குக் காட்ட முற்பட்டனர். என ஜனாதிபதி  மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார் .

    லிபியா, எகிப்து என ஆயிரக் கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர். அப்பாவி மக்கள் குழந்தைகள் என மரணிக்கின்றனர். பலஸ்தீன மக்கள் தமது மத வழிபாடுகளில் ஈடுபட முடியாது அல்லல்படுகின்றனர். அங்கு உணவு போவதை தடுக்கின்றனர். இத்தனை நடந்தபோதும் எமது சில முஸ்லிம் தலைவர்கள் எதுவும் பேசாமல் மெளனித்து வருகின்றனர்.  இதற்காக நாம் 70 களில் குரல் கொடுத்தோம் என்றும் ஜனாதிபதி  மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்

    வடக்கு மலையகத்துக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ் வில் உரையாற்றும்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பேருவளையில் சிறு சிக்கல்: முழு இலங்கையும் எரிவதாக ற்குக் காட்ட முற்பட்டனர் என்கிறார் மஹிந்த Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top