• Latest News

    November 06, 2014

    தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுக்க கூட்டமைப்பும் காங்கிரஸும் இணக்கம்

    தொடர்ந்தும் தமிழ் - முஸ்லிம் உறவை பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.

    தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.

    கொழும்பில் உள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இரண்டு தரப்பினரும் நேற்று சந்திப்பை நடத்தினர்.

    இதன்போது கூட்டமைப்புக்கு ஆர் சம்பந்தனும் காங்கிரஸ_க்கு ரவூக் ஹக்கீமும் தலைமை தாங்கினர்.

    சந்திப்பின் போது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான தற்போதைய உறவு நிலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் நிலைமை குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவதற்கு நேற்றைய சந்திப்பின் போது இணங்கப்பட்டதாக அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுக்க கூட்டமைப்பும் காங்கிரஸும் இணக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top