பி.எம்.எம்.ஏ.காதர்: மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனம் (வலது குறைந்த மக்களுக்கான நிறுவனம்) ஏற்பாடு செய்த 'தலைமைத்துவமும் சமூகப்பாதுகாப்பும்';என்ற தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.அம்பாரை மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.மங்கள விக்ரமாராச்சி கலந்து கொண்டார். வளவாளர்களாக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.கலந்தர்,உளவியல் உளவத்துணையாளர் எம்.எம்.ஜி.பி.எம்.றஷாட், ஹியுமன் லின்க் பணிப்பாளர் ஏ.கமறுத்தின், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ,;; கிராம உத்தியோகத்தர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள்,பள்ளிவாசல் தலைவர்கள் உள்ளீட்ட பலர் கலந்த கொண்டனர்.
November 06, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment