• Latest News

    November 20, 2014

    ரத்ன தேரர் அஞ்ச வேண்டியதில்லை! பாதுகாப்பு வழங்கப்படும்: கெஹலிய- விகாரை மீதான தாக்குதல்! கபே வன்மையான கண்டனம்

    அத்துரலியே ரத்ன தேரரின் விகாரைக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அங்கிருப்பவர்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதியளித்துள்ளார்.

    மேலும் குறித்த விகாரையின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் என்ற வகையில் தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

    அத்துரலியே ரத்ன தேரரின் விகாரை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    எனினும் குறித்த விகாரையை சுற்றிலும் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்துரலியே ரத்ன தேரரின் விகாரை மீதான தாக்குதல்! கபே வன்மையான கண்டனம்

    நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் விகாரை மீதான தாக்குதல் குறித்து கபே அமைப்பு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    குறித்த தாக்குதல் தொடர்பாக கண்டன அறிக்கையொன்றை கபே அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. குறித்த தாக்குதல் நடவடிக்கையில் ஆளுங்கட்சியின் நகர சபை உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தமை ஒரு அச்சுறுத்தலான முன்னுதாரணமாகும்.

    தேர்தல் ஒன்று நெருங்கி வரும் நிலையில் ஆளுங்கட்சியினரின் இதுபோன்ற செயற்பாடுகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள வன்முறைகளுக்கு கட்டியம் கூறுவதைப் போன்று அமைந்திருப்பதாகவும் கபே தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரத்ன தேரர் அஞ்ச வேண்டியதில்லை! பாதுகாப்பு வழங்கப்படும்: கெஹலிய- விகாரை மீதான தாக்குதல்! கபே வன்மையான கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top