• Latest News

    November 22, 2014

    புதிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா?

    ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்த பின் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கிய பொறுப்புகளும், மேலும் ஒரு அமைச்சும் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சியின் தலைவர்கள் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

    நாட்டின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்குரியது.

    சரத் பொன்சேகாவின் இராணுவ ஜெனரல் பட்டம், ஓய்வூதியம் உட்பட அவருக்கு இருந்த சகல கௌரவங்களையும் ராஜபக்ஷ அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.

    அத்துடன் அவரது குடியுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், அடுத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் 72 மணிநேரத்திற்குள் பொன்சேகா இழந்த சகலவற்றையும் அவருக்கு வழங்கும் என அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

    ஜனாதிபதித் தேர்தலின் பின் புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் புதிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

    பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்து கொள்ளும் கட்சிகளுக்கு பகிரப்படும் அமைச்சு பதவிகள், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பிலும் நேற்றைய கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் மெகா அமைச்சரவைக்கு பதிலாக சிறிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி பதவியை பெயரளவிலான பதவியாக மாற்றிய பின் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கும் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் இதன் போது பேசப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top