• Latest News

    November 16, 2014

    எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் பிற்போடப்படும்?

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் பிற்போடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணியொன்றை உருவாக்கி, பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதில் முன்னின்று செயற்பட்ட மாதுளுவாவே சோபித தேரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    வரும் திங்கட்கிழமை (17) குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை 19ம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    எனினும் தனது சுகவீனம் காரணமாக குறித்த ஒப்பந்தத்தை பிற்போட வேண்டாம் என்று மாதுளுவாவே சோபித தேரர், தனக்கு நெருக்கமான தேரர் ஒருவர் மூலமாக எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நல்ல காரியங்கள் பிற்போடப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அவர், ஆம்புலன்சில் வந்தாவது தான் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் பிற்போடப்படும்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top