ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் மு.கா தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்தான் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்று முடிவு செய்யலாம் என தெரிவித்துக் கொண்ட மு.காவின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னரே எமது முடிவுகளை கூற முயுமென்று தெரிவித்துள்ளார்.
மு.காவின் மற்றுமொரு முக்கியஸ்தரிடம் கேட்ட போது மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும். அவ்வாறுதான் மு.கா முடிவு எடுக்குமென்று தெரிவித்துள்ளார்.
இதே வேளை, நேற்றிரவு மு.காவின் அதிஉயர்பீடம் அவசரமாக கூடியுள்ளது. இதன் போது என்ன பேசப்பட்டது பற்றியதொரு தகவலும் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. அநேகமாக ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரி தெரிவு செய்யப்பட்டுள்ளதால் எவ்வாறு நடந்து கொள்வதென்று பேசியிருக்கலாம்.

0 comments:
Post a Comment