மீரியபெத்த மண்சரிவானது, உமா ஓயா நீர்தேக்கம் மற்றும் 23 கிலோ மீற்றர் தூர சுரங்கப் பாதை உட்பட ஏனைய பணிகள் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சுற்றுச் சூழல் இயற்கை சம்பந்தமான ஆராய்ச்சி மையத்தின் அத்தியட்சகர் ரவீந்திர காரியவசம் கூறியுள்ளார்.
டயராபா தோட்டம் முதல் ராவணா எல்ல வரையில் மேற்கொள்ளப்படும் வேலையினாலும் நீரோட்ட பாதைகளில் ஏற்படும் மாற்றங்களாலும் பாறைகள் வெடி வைத்து
தகர்க்கப்படுவது, கல்வெடி போன்ற காரணங்களினாலும் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மலைநாட்டில் பாதைகள், அதிவேக பாதைகள் மற்றும் நீர்வழங்கள் திட்டங்களை மேற்கொள்ளும்போது, போதுமான ஆராய்ச்சிகள் செய்யாமையே இதற்கு காரணமென்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதனால், கடைசியில் அப்பாவி பொது மக்களே பலியாகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஹல்துமுள்ள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொல்ப் விளையாட்டு மைதானம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு பெரிய ஹொட்டல் போன்றவையும் இப்படியான அனர்த்தங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment