• Latest News

    November 09, 2014

    அதிரடி அரசியல் தீர்மானத்தில் இறங்கியுள்ள UNPயின் 04 முக்கிய உறுப்பினர்கள்!

    மங்களசமரவீர ,ரவிகருனானனயாக ,விஜேதாச ராஜபக்ச, இலக்ஷ்மன் கிரிஎல்ல, ஆகியோர் அரசியல் தீர்மானமொன்றை எடுக்கின்றார்கள்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மேற்படி தலைவர்கள் இந்த வார இறுதிக்குள் அதிரடியான அரசியல் தீர்மானமொன்றை எடுக்க வுள்ளதாக கட்சியின் முக்கிய வட்டாரங்களால் அறியக்கூடியதாக உள்ளது.

    நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை அபேட்சகராக நிறுத்தி வெற்றிபெறக்கூடிய தொரு வாய்ப்பு இருக்கையில் ஐ தே க வேட்பாளராக ரணில்  களமிறங்கும் போது நிச்சயமாக தோல்வியை தழுவவேண்டி ஏற்படும் என்றும் அப்படி தோல்வி அடையும் பட்சத்தில் ரணில் விக்கிரம சின்ஹவுக்கு 24 மணிநேரம் கூட கட்சி தலைமை பதவியில் இருக்க முடியாது போகும் என்றும், அத்தருணத்தை எதிர்பார்த்திருக்கும்   சஜித் பிரேமதாச அவர்கள் கட்சி தலைமையை ஏற்கும் நிலை ஏற்படும் என்று உறுதியாக நம்புவதாகவும் அவ்வாறானதொரு தருணத்தில் மகிந்த ரெஜீமின் (படையணியின்) தாளத்திற்கு ஆடக்கூடிய சஜித் போன்றதொரு  அரசியல் பகடைக்காயின் கீழ் ஐ தே கட்சியில் தொடர்ந்தும் செயற்பட முடியாது போகும் என்பதே மேற்படி ஐ தே க உயர்பீட தலைவர்களின் எண்ணமாக உள்ளது.

    அதே வேளை அரசாங்கத்தின் அமைச்சுபதவிகளை வைத்து இவர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும், மங்கள சமரவீரவின் நெருங்கிய வட்டாரமொன்றின் கூற்றின் படி கொள்கை அடிப்படையிலான உடன்படிக்கைகளுடன் அரசாங்கத்தில் இணையக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் அல்லாவிட்டால் அரசியலிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்று வெளிநாடொன்றில்  நிரந்தரமாக தங்கிவிடக் கூடும் என்றும் அறியக் கிடைத்துள்ளது. அதேவேளை சர்வதேச நிறுவனமொன்றின் உயர் பதவியொன்றுக்கான அழைப்பொன்று தற்போதைக்கும் அவருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

    எது எவ்வாறு இருப்பினும் நேற்றிலிருந்து மங்கள சமரவீர அரசாங்கத்தில் சேருவது சம்பந்தமாக பத்திரிகை அறிக்கைகள் வெளிவந்த வண்ணமிருந்தாலும் இதுவரை அவ்வாறானதொரு தீர்மானத்தை அவர் எடுக்க வில்லை என்றும் அறிய முடிகின்றது.மேலும்,  மகிந்த ரெஜீமின் (படையணியின்) ஆட்சியை கவிழ்பதற்கு மேலும் முயற்சி செய்யவேண்டும் என்றும் அதற்காக மற்றுமொரு  மாற்று நடவடிக்கையின் பக்கம் கவனம் செலுத்தப் பட்டு வருவதாகவும்  அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சர்கள்  மங்கள சமரவீரவுக்கு அறிவுறுத்தல் வழங்கிவருவதாகவும் அறிய முடிகிறது. அது நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்த படி ஸ்ரீ ல சு கட்சியின் ஸ்ரேஷ்ட அங்கத்தவர் ஒருவரை எதிர் கட்சிகளின் பொது அபேட்சகராக  களமிறக்குவது சம்பந்தப் பட்டதாகும்.  

    அதேபோல் ‘தி இண்டிபெண்டன்ட்’  க்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி ரவி கருணாநாயக விஜேதாச ராஜபக்ச,கக்ஷ்மன் கிரிஎல்ல,ஆகியோருக்கும் உயர் அமைச்சு பதவிகள் சிபாரிசு செய்யப் பட்டிருப்பதாகவும் அவர்கள் இது விடயமாக இதுவரை தீர்க்கமானதொரு முடிவை எடுக்க வில்லை என்றும் அறிய முடிகின்றது.

    மேலும் ,வ்விடயங்கள் சம்பந்தமாக மேற்படி மந்திரிமார்களால் ரணில் விக்ரமசின்ஹவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளதாகவும், நேற்று காலை ரணில் விக்ரமசிஹவை நேரில் சந்தித்த மங்கள சமரவீர நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொது அபேட்சகர் ஒருவரை களமிறக்க வில்லை என்றால் தனக்கு அரசியல் தீர்வொன்றை எடுக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். 

    கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து கவிழ்க்க பொது அபேட்சகர் ஒருவரை களமிறக்க பலதிட்டங்களை செயற்படுத்தி வந்தவர் ரணில்விக்ரமசின்ஹ வாகும், இதற்காக மிக பல கஷ்டங்களை தாங்கி  உறுதுணையாக செயற்பட்டவர் மங்கள சமரவீர ஆவார். இதற்கான ஒரே தீர்வு அரசாங்கத்தின் உள்ளேயே ஒரு குழுவை ஏற்படுத்துவது என்பதில் மிக உறுதியாகவும் இருந்தார், இக்கருத்தில் எதிர்கட்சியுடன் சேர்ந்து செயற்பட அரசாங்கத்தை சேர்ந்த 24 பேர்களை கொண்டதொரு அமைச்சர்கள் குழுவொன்றும் உடன்பாடுகளுக்கு வந்திருந்தது.

    என்றாலும் இதற்காக ஏற்பட்டிருந்த சாதகமான சந்தர்ப்பத்தை தகர்த்தெறியும் கொந்தராத்தை ஏற்றிருந்த சஜித் பிரேமாதாச கடந்த சில தினங்களுக்கு முன் ஹைட் பார்க் திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களை அவமானப் படுத்தி அச்சந்தர்ப்பத்தை இல்லாமலாகினார், அதே வேளை ரணில்  விக்ரமசின்ஹ மட்டுமே போது அபேட்சகராக களமிறங்க தகுதியானவர் என்ற என்னத்தை கட்சிக்குள் ஏற்படுத்தியதும் சஜித் பிரேமதாசவாகும்.      

    இது முழுமையாக கோதாபாய ராஜபக்ஷவால் செயற்படுத்தப் பட்டதொரு சூழ்ச்சியாகும். இது பற்றி நாம் தொடர்ந்தும் எமது இணைய தளத்தின் ஊடாக வெளிப்படுத்தி வந்தோம், சஜித்தின் கள்ள நோட்டு, மற்றும்  புதையல் சம்பந்தமான பல தஸ்தாவேஜுகள் கொதாபயவசம் உள்ளதாலேயே சஜித் பிரேமதாச கோதாபயவின் தாளத்திற்கு ஆடவேண்டி ஏற்பட்டதற்கான காரணமாகும்.

    டி இண்டிபெண்டன்ட் இணையம்-
    தமிழில் ஏ.எம்.எம் முஸம்மில்- பதுளை


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அதிரடி அரசியல் தீர்மானத்தில் இறங்கியுள்ள UNPயின் 04 முக்கிய உறுப்பினர்கள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top