• Latest News

    December 17, 2014

    300 கோடி ரூபாதான் எமது சமூகத்தின் பெறுமதியா?

    யாஅல்லாஹ்!
    300 கோடி ரூபாவுக்காக எனது சமூகம் ஈடு வைக்கப்படவுள்ள இன்றைய நிலையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக. வியாபாரிகளாலும் சமூகத் துரோகிகளாலும் இன்றைய (15) தினம் கூட நாங்கள் பேரம் பேசப்பட்டுள்ளோம். இதனை எனது மக்கள் இன்னும் அறிந்திருக்க நியாம் இல்லை. ஆனால், நீ அறியாமல் இருக்க நியாயமில்லையே யாஅல்லாஹ்!

    எமது ஒற்றுமையால் 313 பேர் கொண்ட முஃமீன்களுடன் பத்ர் களத்தில் வெற்றி கொண்ட சமூகத்தவர் நாங்கள். ஆனால், உகது யுத்தத்தில் பேராசை எம்மவருக்கு பிடித்ததானால் நாங்கள் தோற்று விட்டோம். அன்றைய நிலையே இன்று உருவாகிவிடும் போலுள்ளது.

    எனது சமூகத்தைக் காப்பாற்ற உன்னை விட இனி எவரும் இல்லை. நம்பியவர்கள் துரோகமிழைக்க துணிந்து விட்டனர். எனது கண்கள் கலங்க உன்னை மன்றாடிக் கேட்கிறேன். பிரார்த்திக்கிறேன். எங்களைக் காப்பாற்றுவாயாக!

    பேரம் பேசும் இந்தச் சக்திகளின் மனநிலையை மாற்றி எங்களது சமூகத்தின் உணர்வுகளை அவர்கள் மதித்து செயற்படச் செய்வாயாக யா அல்லாஹ்! நீயே பெரியவன், அனைத்தும் முடிந்தவன்!!
    - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 300 கோடி ரூபாதான் எமது சமூகத்தின் பெறுமதியா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top