• Latest News

    December 08, 2014

    ஹிருனிகா பொது வேட்பாளருக்கு ஆதரவு: என் தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்

    மேல் மாகாண சபை உறுப்பினரும் கடந்த மேல் மாகாண சபை தேர்தலின் போது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான ஹிருனிகா பிரேமசந்திர எதிரணியில் இணைந்து கொண்டார்.

    ஆளுங்கட்சி சார்பாகவே போட்டியிட்டு வென்றிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மைத்ரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடனுடம் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதுடன் முன்குறிப்பிட்டவர்கள் மீது அதீத மரியாதையும் வைத்திருப்பதை அடிக்கடி வெளிக்காட்டி வந்தவராவார்.
    இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இத்தகவலை வெளியிட்ட அவர் தன்னை யாரும் வற்புறுத்தவில்லையெனவும் தனது சுய விருப்பின் அடிப்படையிலேயே பொது வேட்பாளரை ஆதரிக்கும் நோக்கில் எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    என் தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்

    என் தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், ஜனாதிபதியுடன் முக்கிய நிகழ்வுகளில் கூட கலந்து கொள்கிறார்கள்.

    இதுவெல்லாம் ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதை நினைக்க ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, மூன்று வருடங்களாகியும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்றில்லாததால் நான் பொறுமையுடன் காத்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.

    தற்போது அதற்கான சூழ்நிலை உருவாகியிருப்பதால் நான் பொது வேட்பாளரைப் பலப்படுத்தி அவரது வெற்றிகாக உழைக்க முடிவெடுத்திருக்கிறேன் என தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு பதவிகளும் அமைச்சுகளும் முன்னரிமையுடன் வழங்கப்படுவதைக் கொண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

    நான் ஒரு பெண். என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் சிந்தித்து செயற்பட வேண்டும் எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அறிவுரையையும் மீறியே தான் முடிவெடுத்துள்ளதாகவும் எதற்கும் தான் அஞ்சப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹிருனிகா பொது வேட்பாளருக்கு ஆதரவு: என் தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top