• Latest News

    December 03, 2014

    முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக நீரா யூத் கிளப் அமைப்பினர் அமைச்சர் றிசாட்டுடன் கலந்துரையாடல்

    முஹம்மட் ரிபாக்: முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட நீரா யூத் கிளப் அமைப்பினருக்கும்;, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

    முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்றுக்கு அமைச்சர் வருகை தந்தபோதே குறித்த இளைஞர் அமைப்பினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

    கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் குடிசைக் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச இணைப்பாளர் ஏ.ஜி.சிப்ரியின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

    முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குறிப்பாக ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று, குமாரபுரம், முல்லைத்தீவு பட்டினம், உள்ளிட்ட கிராமங்களின் அடிப்படை தேவைகள் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பிலும், படித்துவிட்டு தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாயப்புக்களைப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு யூத் அமைப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ளது.

     மட்டுமன்றி, தமது மாவட்டத்தின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ள அமைச்சரின் கரங்களை பலப்படுத்தவும், அதன் ஊடாக எதிர்காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி, விளையாட்டு, கலை, கலாசார விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சிப்பதாகவும் அமைப்பினர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், உண்மையில் இளைஞர் அமைப்பொன்று தமது மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி அதிக அக்கரை கொண்டிருப்பது மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்துகிறது.

    அடந்த காலங்களில் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியில் கூடுதலான பங்களிப்பை இறைவனுக்குப் பயந்தவனாக தூய எண்ணத்துடன் முன்னெடுத்து வந்திருக்கிறேன். வர்கள் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும், இனவாதமோ, மதவாதமோ, பிரதேச வாதமோ பார்த்து நான் அபிவிருத்திகளைச் செய்தது கிடையாது.

    எனவே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இன்னமும் நிறைய தேவைகள் காணப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்திலும் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையின் மூலம்தான் எமது மாவட்டத்தின், பிரதேசத்தின் அபிவிருத்திகளை மிகவும் கௌரவமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

    இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான யாசின் ஜவாஹிர், ரிப்கான் பதியுதீன், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு நடைமுறைப்படுத்தும் குடிசைக் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இணைப்பாளர் முஹம்மது மபூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக நீரா யூத் கிளப் அமைப்பினர் அமைச்சர் றிசாட்டுடன் கலந்துரையாடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top