ரயில் தடம்புரள்வு காரணமாக மலையக மார்க்கத்தில் தடைப்பட்டிருந்த ரயில்
சேவைகளை இரவுக்குள் வழமைக்குக் கொண்டுவர முடியுமென கொழும்பு ரயில்வே
கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.
ஹட்டன் – கொட்டகல
பகுதிகளுக்கிடையே இன்று அதிகாலை ரயில் தடம்புரண்டதால் அந்த மார்க்கத்திலான
ரயில் போக்குவரத்து ஹட்டன் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
தடம்புரண்ட
ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று
காலை பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிக்கே ரயில், நானுஓயாவை சென்றடைந்ததாக
ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
எல்ல – ஹீல்ஓயா
பகுதிகளிடையே மண்மேடு சரிந்தமையால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்த
பகுதியில் இதுவரை நிலைமை வழமைக்குத் திரும்பவில்லை என அந்த நிலையத்தின்
பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஆயினும், இன்று இரவுக்குள் ரயில்
போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவர முடியுமென்பதுடன், காலை 8.30க்கு
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட உடரட்ட மெனிக்கே ரயில், பதுளை வரை
போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரயில்வே
கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.NF

0 comments:
Post a Comment