• Latest News

    December 12, 2014

    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பிரியாவிடை பெறுகிறார் கலாநிதி செந்தில்நிதி

    எம்.வை.அமீர்: கடந்த 1998-04-01ம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரசாயனவியல் பிரிவின் விரிவுரையாளராக இணைந்துகொண்ட கலாநிதி ஆர்.செந்தில்நிதி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல்வேறுபட்ட முன்னேற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தார். விசேடமாக இயற்பியல் துறையின் தலைவராக கடைசிவரை பணிபுரிந்த கலாநிதி ஆர்.செந்தில்நிதி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக நியமனம் பெற்றே  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றுச் செல்வது குறிப்பிடத்தக்கது.

    கலாநிதி ஆர்.செந்தில்நிதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் அடிமட்ட தொழிலாளர் முதல் உயர்மட்டத்தில் உள்ள தொழிலாளகள் வரை சகலருடனும் மிகுந்த சுமுகமான முறையில் பழகியவர் அத்துடன் பல்வேறுபட்ட விதத்தில் ஊழியர்கள் முதல் மாணவர்கள் வரை அநேகருக்கு உதவியவர் அவரது பயணம் சிறப்பாக அமையவேண்டும் என்றும் அவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

    இயற்பியல்துறை பிரிவில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களால் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் 2014-12-12 ல் இயற்பியல்துறை பிரிவில் புவியல்விஞ்ஞான பிரிவில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஏ.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இயற்பியல்துறை பிரிவில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவம் வழங்கப்பட்டது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பிரியாவிடை பெறுகிறார் கலாநிதி செந்தில்நிதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top