அபூ-இன்ஷப்: எதிர்வரும் ஜனவரி 08ம் திகதி இந்த நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 55-60 வீதமான வாக்ககளைப் பெற்று பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேன இந்த நாட்டில் தற்பொது நடைபெற்று வருகின்ற கொடுரமான குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவுள்ளார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஷத்சாலி தெரிவித்தார்.
பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் தொழிலதிபர் ஏ.எச்.றமீஸ் தலைமையில் நேற்று (11) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்த கொhண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திறண்டிருந்த நிலையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தெர்தலிலும் விடுதலைப்புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்து தமிழ் மக்களை வாக்களிக்க செய்யாமல் மிகவும் குறுகிய வாக்ககளால் வெற்றி பெற்றார்.
அதே போன்று 2010ம் ஆண்டும் ஜனாதிபதி தெர்தலில் களமிறங்கி வெற்றி பெற்ற பொது வேட்பாளரை பலதரப்பட்ட சூட்சிகளை செய்து பின்தள்ளிவிட்டு ஜனாதிபதியாக பதவியேற்று மக்களை செல்லொன்னா துயரங்களுக்கு உட்படத்தினார்.
2015ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தெர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே எமது இலங்கையின் பாலபாகங்கிலுமுள்ள மக்களை நாளாந்தம் 25000 பேரை அவருடைய மாளிகைக்கு அழைத்து அன்னதானம் வழங்க தொடங்கினார் எமது மக்களுடைய இந்த நாட்டினுடைய பல கொடிக்கணக்கான பொதுப்பணம் இவ்வாறு வீண்விரயம் செய்யட்டது .
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கனவில் கூட நினைத்திருக்க வில்லை பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேன தமக்கு சவாலாக வருவார் என. அவர் கனவு கண்டதெல்லாம் ரணில் விக்ரம சிங்கதான் பொது வேட்பாளர் என அதனை கருத்தில் கொண்டு பொஸ்டர்களும், கையேடுகளும் கொடிக்கணக்கான பணச் செலவில் செய்யப்பட்டிருந்தன இந்த நிலையிலேதான நாங்கள் வழங்கிய அதிற்சி வைத்தியம் காரணமாக மஹிந்தராஜபக்ஷ கதி கலங்கி நிற்கின்றார்.
இன்று அவர் என்ன செய்வதறியாமல் கூட்டங்களுக்கு சென்று அங்கு வருகின்ற கிளவிகளையும் குழந்;தைகளையும் முத்தமிட்டு வருகின்றார்.
இந்த நாட்டிலே வாழுகின்ற சகல இன மக்களும் தீர்மானித்து விட்டனர் யார் அடுத்த ஜனாதிபதி என்பதை சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரணாக இறைவன் இருக்கின்றான் சதி செய்பவர்களுக்கு இறைவன் இவ்வாறுதான் தண்டனை வழங்குவான். எமது மக்களுடைய பணங்கள் அவரடைய அப்பன் வீட்டு பணம் போன்று வீண்விரயம் செய்யப்படுகின்றன மஹிந்த குடும்பத்தின் சுற்றுலாவுக்காக வருடாந்தம் 2500 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்படுகின்றன இது யாருடைய பணம் நாம் நன்றாக சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை நிறைவு செய்தவர் இந்த நாட்டிலுள்ள மகக்களுக்கு நிம்மதியினையும் பாதுகாப்பையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தவார் என என்னிய மக்களுக்கும் அவர்களுடைய மதத்துக்கும் களங்கம் எற்படுத்தி வருகின்றார்.
வடக்கு கிழக்கிலே யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இவர் மூலம் செய்யப்பட்டது அங்குள்ள தமிழ் மக்களுடைய 66 ஆயிரம் ஏக்கர் காணியினையும், முஸ்லிம் மக்களுடைய 33ஆயிரம் ஏக்கர் காணிகளையும் இரானுவம் ஆக்கிரமிப்பதற்கு வழிசமைத்துள்ளார்; இதுதான் இந்த நாட்டின் ஜனாதிபதி மக்களக்கு செய்த நன்றிக்கடனாகும். இவ்வாறு இவரைபற்றி கூறப் போனால் இவருடைய பயில் 25அடி உயரத்தில் எம்மிடமுள்ளது எனவும் தெரிவித்தார்.
எமது நாட்டினுடைய மொத்த பட்ஜட் பணத்தில் 62 வீதமான பணம் மஹிந்த குடும்பத்திடமே உள்ளது இந்த நாட்டிலே உள்ள ஒவ்வொரு குடிமகனுடைய தலைக்கும் 386000 கடன் உள்ளது நாங்கள் கடனாளிகளாகவுள்ளோம்.
எனவேதான் இந்த கொடுரத்தக்கு எதிர்வரம் 9ம் திகதி விடிவுகாலம் கிடைக்கும் எனக் கூறிக் கொள்வதுடன் எமத முஸ்லீம் சமூம் நல்ல முடிவை எடுத்துள்ளார்கள் அவர்களை வழிநடாத்தகின்ற எமது நானமார்களான றிஷhத் நானாவும், ஹக்கிம் நானாவும் எம்முடன் வந்து இணைந்து இந்த சமூக விடுதலை பேராட்டத்தில் பங்குதாரர் ஆகுமாறும் நான் பகிரங்க அழைப்பினை விடுக்கின்றேன் எனவும் கூறினர்;.

0 comments:
Post a Comment