• Latest News

    December 16, 2014

    முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் வெளிநாடு செல்லத் தடை

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரை வெளிநாடு செல்லக்கூடாது எனக் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு உறுப்பினர்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்தத் தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

    ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் இதுவரை தமது முடிவை உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு கட்சித் தலைவரான ஹக்கீமிடம் நேற்று முன்தினம் அனுமதி கோரியதையடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    ரவூப் ஹக்கீமுடன் அரசாங்க உயர்மட்டத்தினர்  பேச்சு

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் அரசாங்க உயர்மட்டத்தினர் நேற்று பேச்சு நடத்தியுள்ளனர்.

    ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை மஹிந்த ராஜபக்சவுக்கு பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்த பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா, கட்சியின் பொருளாளர் டளஸ் அகப்பெரும ஆகியோரே ஹக்கீமைச் சந்தித்தனர்.

    ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இதன்போது பங்கேற்றிருந்தார். இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுளளது.

    2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பின்னர் வந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

    .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் வெளிநாடு செல்லத் தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top