• Latest News

    December 16, 2014

    தேர்தல் பிரசாரத்துக்கு விடுவிக்கப்பட்ட பஸ்கள்: ரசீதுகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

    பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக இரத்தினபுரி பஸ் டிப்போவில் இருந்து விடுவிக்கப்பட்ட 25 பஸ்கள் தொடர்பில் உரிய கொடுப்பனவு ரசீதுகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
     
    இந்தக்கூட்டத்துக்காக 500 பஸ்களை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு நிலையம் முறையிட்டிருந்தது. இந்தநிலையிலேயே இரத்தினபுரி பஸ் டிப்போவில் இருந்து 25 பஸ்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

    இதனையடுத்து குறித்த பஸ்கள் விடுவிக்கப்பட்டபோது அவற்றுக்காக செலுத்தப்பட்ட பணத்துக்கான ரசீதுகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் இரத்தினபுரி பஸ் டிப்போ முகாமைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவும் உரிய கொடுப்பனவுகள் செய்யப்பட்டு பஸ்களை வாடகைக்கு அமர்த்திச்செல்லமுடியும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
    TW-

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல் பிரசாரத்துக்கு விடுவிக்கப்பட்ட பஸ்கள்: ரசீதுகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top