எம்.வை.அமீர்:
தற்போதுள்ள அரசில் இந்தநாட்டில் வாழும்
முஸ்லிம்களும் தமிழர்களும் பாரிய துன்பியல் நிலைமையை அனுபவித்துவருவதாகவும்
அவ்வாறான நிலையை உணர்ந்து முஸ்லிம் மக்களும் ஏனைய மக்களும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
ஆதரவளிக்க அணியணியாக முன்வந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தினை
பிரதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து வெற்றியிலும்
நாட்டைப்பாதுகாக்கும் பணியிலும் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய
மாகாணசபை உறுப்பினரான ஆஸாத் சாலியும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் கிழக்கு
மாகாணத்தில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு செயற்குழு உறுப்பினருமான
எம்.ஏ.எம்.மஹ்றுப்பும் அறைகூவல் விடுத்தனர்.
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
ஆதரவளித்து அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் இன்று இடம்பெற்ற மக்கள்
சந்திப்புக்களின் ஒரு அங்கமாக, சாய்ந்தமருது வர்த்தகர்கள் அடங்கிய ஏ.ஆர்.எம்.அசீம்
தலைமையிலான அமைப்பினரினால் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் 2014-12-11 ம் திகதி இடம்பெற்ற
மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே மேற்கண்ட அறைகூவலை ஆஸாத் சாலியும் மஹ்றுப்பும் முஸ்லிம்
தலைமைகளிடம் விடுத்தனர்.
சாய்ந்தமருது வர்த்தகர்கள் அடங்கிய
ஏ.ஆர்.எம்.அசீம் தலைமையிலான அமைப்பினரினால் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு
மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்
முன்னாள் செயலாளரும் சுகாதார அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான மைத்திரிபால
சிறிசேனவுடைய சகோததரான அரலிய அரிசி ஆலையின் உரிமையாளர் டட்லி சிறிசேன பிரதம
அதிதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினரான ஆஸாத் சாலி
கௌரவ அதிதியாகவும் அதிதிகளாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணத்தில்
இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு செயற்குழு உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்றுப்பும்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோவும் கல்முனை மாநகரசபையின்
உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபாறும் கலந்து கொண்ட அதேவேளை மண்டபம் நிறைந்த மக்களும்
பங்கு கொண்டனர்.
சாய்ந்தமருது வர்த்தகர்கள் அடங்கிய
ஏ.ஆர்.எம்.அசீம் தலைமையிலான அமைப்பினரினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்
முன்னாள் செயலாளரும் சுகாதார அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான மைத்திரிபால
சிறிசேனவுடைய சகோததரான அரலிய அரிசி ஆலையின் உரிமையாளர் டட்லி சிறிசேனவுக்கு
நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
| |||
December 12, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment