நேற்று மு.காவின் குழுவினருக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியாக முடிந்துதாகவும், முஸ்லிம்கள் எதிர் கொண்ட நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிமின் ஊடகச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.ஹபீஸ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தை போல் இன்றைய பேச்சுவார்த்தையும் வெற்றியாக அமையுமென்று எதிர் பார்க்கின்றதாக மு.காவின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை, இன்று மாலை அல்லது இரவு மு.காவின் உயர்பீடம் கூட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மு.காவினதும், முஸ்லிம்களினதும் கோரிக்கைகளை கேலியாக பார்த்தவர்கள், தேர்தலுக்காக பழைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், அதற்கு தீர்வு என அறிவிக்கப்பட்டுள்ளதும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்குமா என முஸ்லிம்கள் மு.காவிடம் கேட்கின்றார்கள்.

0 comments:
Post a Comment