பொதுபல
சேனாவில் நான் இணைந்து 1 ½ வருடம் அங்கத்தவராக இருந்தேன் என்னைப்
பொறுத்தவரை பெளத்த மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது என ஜாஎல தலைவர்
அஞ்சு பெரேரா தெரிவித்துள்ளார்.
பெளத்த
மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பொதுபல சேனாவினால் முடியும் என்று
எண்ணியே அதில் அங்கத்துவம் பெற்று அவர்களின் நடவடிக்கையில் ராஜபக்ஷ
குடும்பத்திற்கு எதிராக அல்லது அரசுக்கு எதிராக எழும் விமர்சனங்களை,
எதிர்ப்புகளை கண்கானித்து அதற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் குரல்
கொடுக்கும் ஓர் இயக்கமாகவே இது செயல்படுகின்றது.
ஆனால்
பொதுபல சேனா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாயவின் கட்டளையை
நிறைவேற்றும் அமைப்பாகவே இருப்பதால் இதில் இருந்து விலகியதாக நேற்று
நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜாஎல நகரசபை தலைவர் அஞ்சு பெரேரா தெரிவித்தார்.

0 comments:
Post a Comment