• Latest News

    December 16, 2014

    யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி குண்டர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல்

    யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி குண்டர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேறியுள்ளதுடன் பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு மேற்கொள்கின்றனர்.
    யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.

    யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

    வடமாகாண சபைக்கான நிதியை செலவு செய்வது தொடர்பில் வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக்கொண்டிருக்கையில், அவர் அருகே சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் தவிசாளர் போல் சிவராசா, சிவாஜிலிங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது போத்தலால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தாக்குதல் மேற்கொள்ள, கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.

    இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். முதலமைச்சரும் வெளியேறினார்.
    TW-


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி குண்டர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top