சிராஜ்:
மு.காவின் மக்கள் பிரதிகளின் கூட்டம் நேற்று கண்டியில் ரவூப் ஹக்கிம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்று ஆராயப்பட்டது. இங்கு நடைபெறும் விடயங்களை அறிந்து கொள்வதற்காக ஊடகவியலாளர்கள் குறிப்பட்ட கூட்டம் நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். ஆனால், ரவூப் ஹக்கிம் ஊடகவியலாளர்களை அங்கு அனுமதிக்கவில்லை. அதற்கான காரணங்களும் சொல்லப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டு ஊடகவியலாளர்கள் சென்று விட்டார்கள்.
ஆயினும், ஒரு இணையத்தளம் மு.காவின் மக்கள் பிரதிகளின் ஒன்று கூடலில் நடைபெற்ற விடயங்களை உடனுக்கு உடன் வெளியிட்டுக் கொண்டிருந்தது. மட்டுமல்லாது, குறிப்பிட்ட இணையத்தளத்தின் நிருபர் ஒருவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்ப செய்த ரவூப் ஹக்கிம் ஏன் குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு மாத்திரம் செய்திகளை சேகரிக்க அனுமதி அளித்தார் என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

0 comments:
Post a Comment