உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொகையில் தேவைக்கேற்ற வசதிகள்
இருந்தாலும், பாதி சதவீதம் பேர் மனச்சோர்விலும், திருப்பிதியின்மையிலுமே
இருக்கின்றனர்.
இந்த நிலையை மாற்ற தன்னம்பிக்கை பயிற்சியாளார் எளிய விளக்கம் :
அது ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனம். தனது நூற்றுக்கணக்கான
பணியாளர்களுக்கு அந்த நிறுவனம் பல சிறப்பான வசதிகளை செய்து தந்தபோதும்
அவர்களில் பலர் திருப்தியின்மையிலும் ஒரு வித மனச் சோர்விலும் வாழ்ந்து
வருவதை அதன் நிறுவனர் கண்டுபிடித்தார். இதையடுத்து அவர்களுக்கு உற்சாகமும்
தன்னம்பிக்கையும் ஊட்டவேண்டி ஒரு சிறந்த பேச்சாளரை கொண்டு தன்னம்பிக்கை
பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தார்
பயிற்சியாளர், தனது பையிலிருந்து ஒரு சிறிய வெள்ளை நிற பட்டுத் துணியை
எடுத்து அனைவரிடமும் காட்டினார். பார்ப்பதற்கு பளப்பளவென இருந்த அந்த
பட்டுத் துணியில், நடுவே ஒரு கரும்புள்ளி இருந்தது.
“இது என்ன?” என்று அனைவரிடம் கேட்கிறார்.
வேகமாக பதில் ஒருவரிடமிருந்து வந்தது. “இது ஒரு கரும்புள்ளி!”
உடனே வேகமாக ஏனையோரும் அவரை ஆமோதித்தனர். “ஆமா… இது ஒரு கரும்புள்ளி!”
“கரும்புள்ளியை தவிர வேறு ஏதாவது நீங்கள் பார்க்கிறீர்களா??”
ஒரு சில நிமிடங்கள் அமைதி. அனைவரும் மீண்டும் அந்த துணியை பார்க்கிறார்கள்.
“இல்லை…! வெறும் கரும்புள்ளியை தான் காணமுடிகிறது!”
“ஏன் இந்த பட்டுத் துணியை பற்றி எவரும் சொல்லவில்லை?”
“………………..”
“இது போன்ற அழகிய வெண்மையான பட்டுத் துணியை நீங்கள் இதுவரை பார்த்திருக்கிறீர்களா?”
“இல்லை….”
“அப்போது ஏன் பட்டுத் துணியை எவரும் குறிப்பிடவில்லை?”
“………………..”
“நீங்கள் அனைவரும் பட்டுத் துணியை இங்கே பார்த்திருப்பீர்கள்.ஆனால், அதில் கண்ட கரும்புள்ளி உங்கள் பார்வையை மாற்றிவிட்டது.”
“வாழ்க்கையும் இது போலத் தான். நமக்கு கிடைத்துள்ள வரங்களின் மதிப்பு
நமக்கு தெரிவதில்லை. அந்த பட்டுத் துணியில் இருந்த சிறு கரும்புள்ளியை
போன்று நமக்கு நிகழும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் பெரிதுபடுத்தி நம்மை
சுற்றிலும் நிகழும் பல அற்புதமான விஷயங்களை நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம்.
நமது அறிவையும் ஆற்றலையும் கவனத்தையும் ஏமாற்றங்களில் செலவழிக்கிறோம்.
குறுகிய வட்டத்துடன் பார்க்காமல் நமது பார்வையை சற்று அகலப்படுத்தினால்
அந்த கரும்புள்ளியை போல நமது பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் சிறியதாகி
மறைந்துவிடும்.”
நாம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதையே அதிகம் ஈர்க்கிறோம். நமது
அறிவையும் ஆற்றலையும் ஏமாற்றங்களின் பக்கமே செலுத்தாமல் வெற்றியின் பக்கம்
செலுத்தினால், மேலும் மேலும் வெற்றியை அதிர்ஷ்டத்தை ஈர்க்கலாம். தோல்வியை
பற்றியும் ஏமாற்றங்ககளை பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருந்தால் மேலும்
மேலும் அதில் தான் ஈடுபட முடியும்.
“எனக்கு எல்லாவற்றிலும் தோல்வி தான்… வெற்றியையே நான் அறியாதவன்…. நான்
ஒரு அதிர்ஷ்டம் கெட்ட கட்டை… நான் எப்படி வெற்றியை பற்றி சிந்திப்பது?”
என்று யாராவது நினைத்தால், முழுக்க முழுக்க உங்கள் மனமும் சிந்தனையும்
எதிர்மறையாகவே இயங்கிவருகிறது என்று தான் அர்த்தம்.
கீழே கொடுத்தவைகளில்,
1) நல்ல உடல் 2) அதில் நல்ல கண் பார்வை 3) அப்பா அம்மா மற்றும் சகோதர
சகோதரிகள் 4) வசிக்க வீடு 5) பேசும் சக்தி 6) கேட்கும் திறன் 7) அன்பை
பொழியும் குழந்தைகள் & மனைவி 8) நமக்கு ஏதாவது ஒன்று என்றால்
பதறிப்போகும் நண்பர்கள் இப்படிப் பலப் பல….
இந்த பட்டியலில் ஏதாவது உங்களிடம் இல்லாமல் இருக்கிறதா..? ஆனால் இந்த
பட்டியலில் உள்ள பல பல ஆசிகள் இல்லாமல் இருப்பவர்கள் பலர் இந்த உலகில் பல
கோடி உண்டு. எனவே, நீங்கள் அவர்களை காட்டிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் தான்.

0 comments:
Post a Comment