• Latest News

    December 04, 2014

    ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது

    ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள தெல்தெனிய – மெததும்பர பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

    ஒரு மேலதிக வாக்கினால், வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

    மெததும்பர பிரதேச சபையில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் இவர்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர்.

    இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் போது ஆளும் கட்சியின் 5 உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரவில்லை.
    TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top