தர்ம
ராஜ்ஜியத்தை உருவாக்கும் பயணத்திலிருந்து தடம் புரண்டுள்ள ஜாதிக
ஹெல உறுமய இன்று செய்நன்றி மறந்து நாட்டுக்கு எதிரான சதிகார
கூட்டத்திற்கு துணை போகின்றது எனக் குற்றம் சாட்டும் முன்னாள் ஹெல
உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
எல்லாவெல மேதானந்த தேரர் உண்மையான ஹெல உறுமயவும் நாங்களும்
இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு ஏகமனதாக
தீர்மானித்துள்ளோம் என்றும் தேரர் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் உள்ள மிஹிலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை
இடம்பெற்ற நாளைக்கு ஒரு நாடு என்ற அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில்
உரையாற்றும் போதே எல்லாவெல மேதானந்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
தேரர் இங்கு தொடர்ந்தும்
உரையாற்றுகையில்இ நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து அனைத்து இன
மக்களும் சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கியவர் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக் ஷ. சிங்கள பௌத்தர்களின் பாதுகாப்பிற்கு
உத்தரவாதமளித்தவர்.
எனவே நாம் செய்நன்றி மறவாதவர்களாக
தர்மத்தின் வழி நடப்பவர்களாக இருக்க வேண்டும். இந் நாட்டில் தர்ம
ராஜ்ஜியத்தை உருவாக்கும் உயரிய கொள்கையுடனேயே ஜாதிக ஹெல உறுமய
உருவாக்கப்பட்டது. இன்று அந்த உயரிய நோக்கத்தை ஹெல உறுமயவின் சிலர்
கைவிட்டு பிழையான பாதையில் பயணிக்கின்றனர்.
அத்தோடு இன்று ஹெல உறுமயவுக்குள்
கருத்து மோதல்கள்இ முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளன. ஒரு கூட்டம்
சதிகாரர்களின் பொது அணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை
ஆதரிக்க தீர்மானம் எடுத்துள்ளது.
ஆனால் உண்மையான ஜாதிக ஹெல உறுமயவைச்
சேர்ந்தவர்கள் இதனை எதிர்க்கின்றனர். அவர்கள் செய்நன்றி
மறவாதவர்கள். எனவே நாட்டை ஒன்றுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்
ஷவை ஆதரிக்க தீர்மானித்து விட்டனர்.
எதிர்காலத்தில் உண்மையான நாட்டை
மக்களை நேசிக்கும் உண்மையான ஹெல உறுமயவினர் எம்மோடு இணைவார்கள்.
நிச்சயம் தர்மம் வெல்லும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டில்
மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும் எல்லாவெல மேதானந்த தேர்
தெரிவித்தார்.
இங்கு தெனகம தம்மானந்த தேரர் கருத்து
தெரிவிக்கையில், சர்வாதிகாரத்தை ஒழிப்பதாக பேசும் அத்துரலியே ரத்ன
தேரர் இன்று ஹெல உறுமயவுக்குள் ஓர் சர்வாதிகாரியாக செயற்பட்டு
வருகிறார். தன்னிச்சையான முடிவுகளை எடுத்து தர்மராஜ்ஜியம் என்ற
உயரிய கொள்கையை தூக்கியெறிந்து விட்டு எவரது தேவையை
நிறைவேற்றுவதற்காக தூய்மையான நாளை என்ற இயக்கத்தை
ஆரம்பித்துள்ளார். ஹெல உறுமயவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார்.
பிரபாகரனின் பிறந்த நாளுக்கு பிஸ்டலை
பரிசாக வழங்கிய ரணில் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கின்றார். இது
எந்த விதத்தில் நியாயமாகும்? ரத்ன தேரர் தர்மத்தின் பாதையில்
பயணிக்கவில்லை. குரோத அரசியலை முன்னெடுக்கின்றார்.
இதனை தோல்வியடையச் செய்வோம். தர்மத்தை
பாதுகாப்போம் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் பல பௌத்த
குருமாரும் கலந்து கொண்டார்கள்.LM

0 comments:
Post a Comment