• Latest News

    December 14, 2014

    கல்வியாளர் எம்.ஐ.எம்.அமீனின் நூல்கள் வெளியிடும் கௌரவிப்பும்

    எம்.வை.அமீர்: நமது நாட்டில் பல்வேறு புத்திஜீவிகளை உருவாக்கிய அதிலும் விசேடமாக ஆதாரங்களுடன் வரலாறுகளை தேடித்தந்த கல்வியாளரான எம்.ஐ.எம்.அமீன் இந்த நாட்டு முஸ்லிம்களால் மிகவும் மதிக்கப்படவேண்டியவர்.

    இலங்கையில் முஸ்லிம்களது வரலாறுகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ‘கிழக்கிலங்கை முஸ்லிம் கல்விச் சமூகம்’  என்றழைக்கப்படும் கல்வியாளர்களைக் கொண்ட அமைப்பினரால் கௌரவிப்பு நிகழ்வும் அன்னாரால் எழுதப்பட்ட சிவப்புக்கோடு, முஸ்லிம் ஸ்பெயின் (ஒரு வரலாற்று சமூகவியல் நோக்கு) என்ற புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

    தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி மௌலவி எம்.எஸ்.எம்.ஜமால்தீன் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் 2014-12-13 ல் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இப்பிராந்தியத்தில் இருந்து பல்வேறுபட்ட கல்வியாளர்களும் கல்வியாளர் எம்.ஐ.எம்.அமீன் அவர்களிடம் கலவி கற்ற மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

    இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமசபையின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா ஆசியுரை வழங்கினார் கலாநிதி மௌலவி எம்.எஸ்.எம்.ஜமால்தீன் தலைமையுரையையும் இன்னுமொரு ஆசியுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம்.மசாகிர் ஆற்றியதுடன் நூல் விமர்சன உரையையும் கௌரவிப்பு உரையையும் பேராசிரியர் எம்.ஏ.எம்.நுஹ்மான் நிகழ்த்தினார் அத்துடன் மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல் போன்றோரும் உரையாற்றினர். இங்கு தமிழிலும் அரபியிலும் வாழ்த்துப்பாக்களும் பாடப்பட்டன.

    இறுதியாக கல்வியாளர் எம்.ஐ.எம்.அமீன் அவர்களை கௌரவித்து பொன்னாடைகளும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வியாளர் எம்.ஐ.எம்.அமீனின் நூல்கள் வெளியிடும் கௌரவிப்பும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top