• Latest News

    December 14, 2014

    30 வருட யுத்தத்தை ஒழித்த தலைவனை சர்வதேசத்திற்கு முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பது துரோகமாகும்: கி.மா.ச உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்

    அபூ-இன்ஷப்:   கடந்த 30 வருடகாலமாக எமது நாட்டில் நிலவிய கொடூர யுத்தம் காரணமாக முஸ்லீம் சமூகம் இழப்பதற்கு எதுவுமில்லாமல் இழந்து தவித்த போது எமக்கு கைகொடுத்த எமது சமூகத்துக்கு பாதுகாப்பு வழங்கிய கொடூர யுத்தத்தையும் பயங்கர வாதத்தையும் இல்லாமல் செய்த ஒரு தலைவனை சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்க முஸ்லீம் சமுகம் முற்படுவது துரோகத்தனமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எம்.எல்.ஏ.அமீர் தெரிவித்தார்.

    நேற்று மாலை (13) அவருடைய பணிமனையில்; நடைபெற்ற கட்சியின் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

    ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.தம்பிக்கண்டு தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் இன்று தன்மானத்துடன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய அரசுமே காரணமாகும் யுத்தம் நிலவிய போது எங்களுடைய பாட்டன் பூட்டன் காடுவெட்டி வேர்பிடுங்கி காலகாலமாக செய்துவந்த வயல்களுக்கு செல்ல முடியாமலும் ஏன் எமது உறவினர்கள் விட்டுக்கு போகமுடியாது, பள்ளிகளுக்கு, பாடசாலைகளக்கு, வைத்திய சாலைக்கு, எமக்கு அன்றாடம் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள சந்தைக்க கூட செல்லமுடியமல் நாம் பட்ட துன்பங்கள் துயரங்களை மிண்டும் ஒருகனம் நாம் சிந்திக்க வேண்டும்.

    வெளியில் சென்ற எமது சகோதரங்கள் மீண்டும் வீடு வரவில்லை வீதிகளிலும் வயல் வெளிகளிலும் வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்ட நிலையில்; வெற்று உடல்களை நாம் விட்டுக்கு கொண்டு வந்த வரலாறுகளை மீட்டிப்பார்க்க வேண்டும் ஏன் எமது சில சகோதரர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாத ஒன்றாகவுள்ளன.

    ஆண்டாண்டுகாலமாக ஆட்சி அதிகாரங்களில் இருந்த தலைமைகள் அன்று நடைபெற்ற கொடூர பயங்கரவாதத்தை காரணம் காட்டிக் காட்டி அரசியல் பிழைப்பை நடாத்தினார்களே தவிர யுத்தத்தையும் பயங்கர வாதத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து அழிந்து கொண்டிருந்த மக்களை பாதுகாக்க முன்வரவில்லை.

    2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ முன்வந்த போது அவருக்கு எமது தேசிய காங்கிரஸ் அன்று கைகொடுத்து எந்தவொரு தனிப்பட்ட நிபந்தனைகளுமின்றி இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அதாவது இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வது மற்றது இணைந்த வடகிழக்கை பிரிப்பது என்ற கோரிக்கையுடன் களமிறங்கி வெற்றி கண்டதன் பயனாக இன்று நாம் நிம்மதியாக சந்தேசமாகவும் வேண்டிய இடத்துக்கு வேண்டிய நேரம் சென்று எமது பணிகளை செய்தவருகின்றோம்.

    எனவே நாம் அனைவரும் எமக்கு நிம்மதியினையும் பாதுகாப்பினையும் ஏற்படுத்திய  நன்றிக்கடனுக்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

    மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியான விடயம் அவற்றில் எமது முஸ்லீம் மக்களுடைய பங்களிப்பு அதிமாக இருக்க வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 30 வருட யுத்தத்தை ஒழித்த தலைவனை சர்வதேசத்திற்கு முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பது துரோகமாகும்: கி.மா.ச உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top