• Latest News

    December 11, 2014

    சுகாதார அமைச்சராக திஸ்ஸ அத்தநாயக்க பதவிப்பிரமாணம்!

    ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

    பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆளும் கட்சியை விட்டு விலகியதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சுப் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

    தற்காலிக அடிப்படையில் பிரதி சுகாதார அமைச்சர் நலின் திஸாநாயக்க பதில் சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்தார்.

    இன்று முற்பகல் திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

    கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் திஸ்ஸ அத்தநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

    சுகாதார அமைச்சர் பதவிக்காகவே திஸ்ஸ கட்சித் தாவியுள்ளதாக ஏற்கனவே கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

    எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை திஸ்ஸ அத்தநாயக்க மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுகாதார அமைச்சராக திஸ்ஸ அத்தநாயக்க பதவிப்பிரமாணம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top