அபூ-இன்ஷாப்: எதிர்வரும் ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் குடும்ப கொடுர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடு பூராகவுமுள்ள மக்கள் இன,மத,மொழி வேறுபாடின்றி அணிதிரண்டுள்ளனர் என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவின் சகோதரரும் அரலிய நிறுவனத்தின் அதிபருமான தொழில் அதிபர் டட்லி சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் சம்மாந்தறை மக்களால் இன்று (11) மாலை ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொழில் அதிபர் ஏ.எச்.றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் டட்லி சிறிசேன தொடர்ந்து உரையாற்றுகையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 30 ஆண்டுகாலமாக எமது நாட்டில் நிலவிய யுத்தத்தை நிறைவு செய்தவர் என்ற பெருமைக்குரியவராக மஹிந்தராஜபக்ச திகழ்ந்ததனால் அவரின் வெற்றிக்காக நாம் அனைவரும் களத்திலிருந்து வெற்றியடையச் செய்தோம்.
அவர் 2005 தொடக்கம் 2010 ஆண்டு வரைக்கும் மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவனாக வீரனாக மக்களின் மனங்களில் நிறைந்திருந்தார் அதன் பின்னர் அவரடைய குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியதால் ஆணவம்மிக்கவராக மக்களையும் மதங்களையும் மதிக்காமல் மக்களை சூரையாடுகின்ற ஒரு கொடுர குடும்ப ஆட்சியினை நடாத்தி மக்களுக்கு தொடர்சியான சுமைகளை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இன்று இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் மனங்களில் இந்தக் கொடுர ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அங்கலாய்ப்பு மக்கள் ஒவ்வொருவரினதும் மனங்களில் திடமாக எழுந்துள்ளது. இதனாலேயே எந்தவொரு விளம்பரமுமின்றி மக்கள் மனங்களில் மைதிரிபால சிறிசேன இடம் பிடித்துள்ளார்.
எதிர்வரும் 09ம் திகதி மைதிரிபால சிறிசேன அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இந்த நாட்டின் சகல இன மக்களுக்குமான ஜனாதிபதியாக வரவுள்ளார். இந்த வெற்றிக்காக எந்தவொரு எதிபார்புகளுமின்றி ஒன்று திரண்டுள்ள இந்த மக்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
இன்று அபிவிருத்தி என்ற மாயைக் காட்டி பாலங்களையும் பாதைகளையும் அமைத்து அதன் மூலம் கொடிக்கணக்கான பணங்களை கொள்ளையிட்டு வருகின்றனர் சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதற்காக வெளிநாடுகள் வழங்கிய பணத்தை வைத்துக் கொண்டு இன்று அபிவிருத்தி மாயை மூலம் மக்களை ஏமாற்றி வருகின்றார் .
இந்த மாயைக்கும் மஹிந்த குடும்பத்தின் கொடிய ஆட்சிக்கும் சரியான பாடம் இந்த நாட்டு மக்கள் கற்பிக்கவுள்ளனர். எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசத் சாலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரதாச கலபதி, சம்மாந்துறைத் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஹசன்அலி உட்பட பலர் கலந்த கொண்டனர்.


0 comments:
Post a Comment