• Latest News

    December 11, 2014

    மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த அரசு இழந்தது!

    அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது

    மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரோ, சிகல உறுமய தலைவர் சோபித தேரர், குணசேகர, வசந்த, கலாநிதி ரஜிவ விஜேசிங்க, ஹூனைஸ் பாருக், இராஜதுரை, திகாம்பரம், சந்திரசேகரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் இணைந்துள்ளார்.

    மேலும் மேல்மாகாணசபை, ஊவா மாகாணசபை, வடமேல் மாகாணசபை, சப்ரகமுவ மாகாணசபைகளில் உள்ள 9 ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறியதால் அதனை மீள அரசுக்கு ஆட்சி நடத்த முடியாமல் போயுள்ளது.

    இச் சபைகள் வரவுசெலவுத்திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் கூடுவதாக பிற்போடப்பட்டுள்ளது.

    கிழக்கு மாகாணசபையும் கடந்த வாரம் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறாது பிற்போடப்பட்டுள்ளது.

    18 வது அரசியல் திருத்தத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் 8 உறுப்பினர்களும் சேர்ந்து 3ல் இரண்டு பெரும்பான்மையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    அத்துடன் ஜனாதிபதி 3வது முறை தேர்தலில் குதிப்பதற்கும் ஆதரவு வழங்கி முஸ்லீம் காங்கிரஸ் முட்டுக்கொடுத்தது. ஆனால் இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்குச் சென்றதால் 165 பாராளுமன்ற உறுப்பினர்களில் 151 மிஞ்சியுள்ளனர்.

    இதில் எதிர்க்கட்சியிலிருந்து அரச பக்கம் வந்த திஸ்ச அத்தநாயக்க, கெட்டகொட உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

    இனி அரசுக்கு எந்தவொரு அரசியலமைப்பையும் பாராளுமன்றத்தில் வெற்றி கொள்ள முடியாத ஏற்பட்டுள்ளது.

    நாளை அல்லது மறுநாள் யார் யாரெல்லாம் எதிரணிக்கு வரவுள்ளார்கள் என்ற விபரங்கள் வெளிவராத போதும், அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஆகக் குறைந்தது 113 பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த அரசு இழந்தது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top