இலங்கை அரசியல் வரலாற்றில் கடுமையான
காட்டிக்கொடுத்தலை மைத்திரபால சிரிசேன செய்துள்ளார் என நீர்பாசன மற்றும்
நீர் வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.
இன்று (09) பத்தரமுல்ல எங்கள் கிராமம்
(அபே கம) வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவிததார்.
கட்சியில் பலவருடங்கள் ஒன்றாக
இருந்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் எதிர்கட்சி பொது வேட்பாளராக
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகிறேன் என சொல்லவேண்டும் என்ற
மரியாதை கூட தெரியாத அவர் பின்னால் இருந்து கத்தியால் குத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியில் குழுவாதம்-
சந்தர்ப்பவாதம் தலைவிரித்தாடும் ஒரு சந்தர்ப்பத்தில் திஸ்ஸ அத்தநாயக்க
அரசாங்கத்துடன் இணைந்துள்ளமை மதிக்கப்பட வேண்டியதொன்றாகும். ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்க அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள வீழ்ச்சி - ஒழுங்கின்மை போன்றவை பற்றி
அவருக்குத் தெரியும். சரத் பொன்சேக்காவுக்குப் பதிலாக பலமாக இருந்த ஜயந்த
கெட்டகொடவும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார். நாட்டின் ஸ்தீரதன்மையை
இல்லாது செய்ய எதிர்கட்சி முன்னெடுக்கும் செயற்பாடுகளை முறியடிக்க- மஹிந்த
ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்க இணைந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
அதேபோல்- எதிர்கட்சியில் சிலர் ஜனாதிபதி
ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பத்துடன் உள்ளனர். அதை நாம் மதிக்க
வேண்டும். ஐதேகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் இல்லாமல் போவதற்கு
அடையாளம் திஸ்ஸ அத்தநாயக்கவின் வருகை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இதனை
நன்றாக தெரிந்துக்கொண்டு மக்கள் செயற்படவேண்டும் என சுதந்திரக் கட்சியின்
சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.NS

0 comments:
Post a Comment