மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளார். அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
தற்பொழுது கொழும்பு 7 லில் அமைந்துள்ள
எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக
எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத
லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமசந்திர இறுதியாக நடைபெற்ற
மாகாண சபை தேர்தலில் மேல் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பில் போட்டியிட்டு ஆளும் கட்சி சார்பாக 139034 அதிகூடிய விருப்பு
வாக்குகளைப் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment