• Latest News

    December 06, 2014

    கல்முனையில் வன்முறையற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தலைப்பில் பேரணியும் கருத்துப் பரிமாற்றமும், நாடகமும்

    எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்: வன்முறையற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தலைப்பில் பேரணியும் கருத்துப் பரிமாற்றமும், நாடகமும் இன்று 2014-12-06 ம் திகதி கல்முனை ராம கிறிஷ்ன மிசன் வித்தியாலயத்தில், கல்முனை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மகளிர் நிலையத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மகளிர் நிலைய விழிப்புக்குழுவின் சார்பில் ஏ.ஜே.எம்.றிசாத் தலைமையில் இடம்பெற்றது.
    கல்முனை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மகளிர் நிலையத்தின் தலைமகத்தில் இருந்து ஆரம்பமான பேரணி கல்முனை ராம கிறிஷ்ன மிசன் வித்தியாலயத்தில் முடிவுற்று, பின்னர் கல்முனை ராம கிறிஷ்ன மிசன் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.பாருக் கலந்து கருத்துரை வழங்கினார்.
    அவர் தனது கருத்தில் குடும்ப நல சுகாதாரம் தொடர்பான விடயங்களை வளமான குடும்பத்தைத் திட்டமிடல், வன்முறையற்ற சமூக, குடும்ப கட்டமைப்பை உருவாக்குதல், குடும்பத்தை திட்டமிடல், சுகாதார பழக்கவழக்கங்களை மேன்படுத்துதல், குடும்ப பொருளாதார விருத்திக்கு வழியமைத்தல் போன்ற தலைப்புகளில் விளக்கினார்.
    இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மகளிர் நிலையத்தின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் பங்குபற்றிய அதேவேளை இப்பிராந்தியத்தின் உள்ளூர் சமூக தலைவர்களும் அரச உத்தியோகத்தர்களும் பெரும் திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.
    நிகழ்வில் போதைப்பொருள் மற்றும் குடும்பத்தை சீரழிக்கும் தவறான தொடர்புகள் என்ற விடயத்தை கருப்பொருளாகக் கொண்டு மேடை நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனையில் வன்முறையற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தலைப்பில் பேரணியும் கருத்துப் பரிமாற்றமும், நாடகமும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top