• Latest News

    December 16, 2014

    ராஜபக்ஷ குடும்பம் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய அழிவு அதிகம்: சம்பிக்க ரணவக்க

    தமிழீழ விடுதலைப் புலிகள் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய அழிவை விட ராஜபக்ஷ குடும்பம் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய அழிவு அதிகம் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

    ´ஆலபாலு ஆர்த்திகய´ (“வீழ்ச்சி கண்ட பொருளாதாரம்”) என்ற பெயரில் நேற்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    அரசாங்கம் தமது கடன்படுகையை சிறிய நிறுவனங்களுக்கு மாற்றிவிடும் கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் உதாரணமாக, புத்தளம் அனல் மின்சார நிலையத்துக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை அரசாங்கம் லங்கா அனல் நிறுவனத்துக்கு மாற்றிவிட்டது.

    இதன்காரணமாக இறுதியில் பொதுமக்களே கடன்களையும் அதற்கான வட்டிகளையும் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை அரச வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்களுக்கான வட்டிகளை மக்கள் வங்கி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை போன்றவை செலுத்துகின்றன.

    இதன் காரணமாகவே பொதுமக்கள் அதிகமான மின்சாரக் கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று ரணவக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நகர அபிவிருத்திகள் என்ற பெயரில் நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு பாதைகள் அதிவேக பாதைகளாக மாற்றப்படுகின்றன. எனினும் இதற்காக 7 வீத வட்டியில் கடன்கள் பெற்றுக் கொள்ளப்படுவதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.

    திரைசேறி செயலாளர் பிபி.ஜயசுந்தரவின் பொருளாதார தகவல்கள் பொய்யானவை என்றும் நிதி அமைச்சின் செயலாளர் நாட்டின் கடன் சுமையை குறைத்து கூறுவதாகவும் பொய் தரவுகளை காட்டி கடனை குறைத்துக்கூறி நாட்டு மக்களை ஏமாற்றுவதாகவும் சம்பிக்க குறிப்பிட்டார்.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியாக யுத்தத்தை வென்றதாக கூறப்படுவதாகவும் அது பொய் என்றும் அவர் தனித்து யுத்தத்தை வெல்லவில்லை எனவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறினார்.

    புலிகள் மீண்டும் உருவாவதாக அரசாங்கம் கூறுவதாகவும் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கினால் அதனை தடுக்க தான் உள்ளிட்ட குழுவினர் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜபக்ஷ குடும்பம் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய அழிவு அதிகம்: சம்பிக்க ரணவக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top